பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/307

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐங்குறுநூறு 283 நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் இயற்றிய புலவர்களே ஐங்குறு நூற்றில் இடம்பெற முடிந்தது என்னும் உண்மை புல னாகும். இந்த ஐவரேயன்றி இன்னும் சிலர் நூற்றுக்கு மேல் பாடியிருக்கலாம்; ஆனால் அவை அழிந்து போயிருக்கக்கூடும். அல்லது - ஐங்குறு நூற்றுப் பாடல்களிலும் சிறப்பில்லாதனவா யிருந்திருக்கக் கூடும். எனவேதான், குறிப்பிட்ட சிறந்த ஐவரின் ஐந்நூறு பாடல்களைக் கூடலூர் கிழார் தேர்ந் தெடுத்து, ஐங்குறுநூறு உருவாக்கினார். ஐங்குறு நூற்றிலுள்ள ஒவ்வொரு திணையும் உதிரிப் பாடல்களின் தொகுப்பாயினும் நூறு - நூறு பாடல்கள் வீதம் கொண்டிருப்பதால், ஒவ்வொரு திணையும் ஒரு நூலின் பெறுமானம் உடையதாகும். எனவேதான், ஐங்குறுநூறு ஐந்து நூல்களின் திரட்டு எனப்பட்டது. இது 'பன் மாலைத் திரள் வகையைச் சேர்ந்தது. நூல் அமைப்பு ஐங்குறு நூற்றுத் தொகுப்பில் ஒரு புதுமாதிரியான கலை நயம் கையாளப்பட்டது. ஒவ்வொரு திணையும் பத்துப் பகுதி களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் ஒவ்வொரு பகுதியும் 'பத்து' என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தே, பின்வந்த நாயன்மார், ஆழ்வார்கள் முதலியோரின் பத்துப் பாடல்கள் கொண்ட பகுதிகள் பத்து’ எனவும், பதிகம்' என வும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்நூறு பாடல்கள் கொண்ட ஐங்குறு நூறு ஐம்பது பத்துக்களாகப் பகுக்கப் பட்டுள்ளது. ஐங்குறு நூற்றில் ஒவ்வொரு பத்துக்கும் பெயர் வைத்தி ருக்கும் முறை, மிக்க கலைநயம் வாய்ந்ததாகும். சில பத்துக் கள் அந்தந்தத் திணைக்குரிய விலங்குகள், பறவைகள் போன்ற கருப் பொருள்களாலும், சில பத்துக்கள் இன்னார்க்கு இன் னார் சொல்லியது என்பது போன்ற துறைப் பெயர்களாலும், சில பத்துக்கள் பாடல்களிலுள்ள சிறப்புச் சொற்களாலும் சிறப்புத் தொடர்களாலும், சில பத்துக்கள் பாடல்களில்