பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தமிழ் நூல் தொகுப்புக் கலை பொதிந்துள்ள பொதுக் கருத்தாலும், சில பத்துக்கள் இன்ன பிற காரணங்களாலும் பெயர் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாகச் சில பெயர்கள் வருமாறு: வேட்கைப் பத்து, எருமைப் பத்து, தாய்க்கு உரைத்த பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, தொண்டிப் பத்து, அன்னாய் வாழிப் பத்து, கிள்ளைப் பத்து, செலவழுங்குவித்த பத்து, இள வேனில் பத்து, பாசறைப் பத்து - முதலியனவாம். ஒவ்வொரு பத்திலும் உள்ள பத்துப் பாடல்களிலும், அந்தப் பத்தின் தலைப்பாக உள்ள சொல்லோ, சொற்றொடரோ, பறவை - விலங்குப் பெயரோ, துறைக் கருத்தோ தவறாமல் இருக்கும் எடுத்துக் காட்டாக, - தாய்க்கு உரைத்த பத்தில் பத்துப் பாடல்களின் தொடக்கத்திலும், அன்னை வாழி வேண் டன்னை' என்னும் தொடர் உள்ளது. தொண்டிப் பத்தில் எல்லாப் பாடல்களிலும் தொண்டி’ என்பது உள்ளது. இந்தப் பத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் அந்தாதித் தொடை யாய் அமைந்திருப்பது சுவையாயிருக்கிறது. அஃதாவது,முதல் பாடலின் இறுதிப் பகுதி அடுத்த பாடலின் முதல் பகுதி யாக அமைந்துள்ளது. பத்துப் பாடல்களும் இங்ஙனம் சங்கிலித் தொடர்போல் கோத்துக் கொண்டுள்ளன. பிற்காலத்தில் தோன்றிய அந்தாதி நூல்களுக்கு, இந்தத் தொண்டிப் பத்து முதல் முன்னோடியாய் ஐங்குறு நூற்றில் அமைந்திருப்பது நயத்தற்கும் வியத்தற்கும் உரியது. எடுத்துக் காட்டாக,முதல் மூன்று பாக்களின் அந்தாதி அமைப்பினைக் காண்பாம். முதல் பாடலின் இறுதியடி, ஒண்டொடி யரிவை என் நெஞ்சு கொண்டோளே என்பது; இரண்டாவது பாட்டின் முதலடி, 'ஒண்டொடி யரிவை கொண்டனள் நெஞ்சே என்பது; இரண் டாம் பாடலின் இறுதியடி, இரவினானும் துயில் அறியேனே' என்பது; மூன்றாம் பாட்டின் முதலடி, இரவினானும் இன் துயில் அறியாது’ என்பதாகும். இப்படியே சங்கிலித் தொடர் போய்க் பொண்டிருக்கிறது. அடுத்து, கிழவற்கு உரைத்த பத்தின் எல்லாப் பாடல்களிலும், 'கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே' என்பது முதல் அடியாகவும், புறவணி பத்தின் பாடல்கள் அனைத்திலும்