பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐங்கு றுநூறு 285 'நன்றே, காதலர் சென்ற ஆறே என்பது முதல் அடியாகவும் இருப்பதும் நன்றாயுள்ளது. வெள்ளாங் குருகுப் பத்தின் எல் லாப் பாடல்களிலும், 'வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை என்னும் இரண்டு அடிகளும் முதல் இரண்டு அடிகளாய் அமைந்திருப்பது மிகவும் நயமாயிருக்கிறது, இந்த அமைப்பினை நோக்குங்கால்,- ஐங்குறுநூற்றுப் புலவர்கள், பத்துப் பர்டல்கள் கொண்ட எண்ணிறந்த 'பத்துக்கள் பாடியிருக்க வேண்டும் என்பது புலனாகும். ஒவ் வொருவரும் திட்டமிட்டு அழகுறப் பாடிய பத்துக்கள் பல வற்றுள்,பத்துப் பத்துக்கள் வீதம் ஐம்பது பத்துக்களைத் தேர்ந் தெடுத்துக் கூடலூர் கிழார் ஐங்குறு நாற்றைத் தொகுத்து உருவாக்கியுள்ளார் என உய்த்துணரலாம். தனிப் பாடல்கள் ஐங்குறு நூற்றில் 129,130 ஆகிய எண் கொண்ட பாடல் கள் இரண்டும் முழுதும் கிடைக்கவில்லை. 416 - ஆம் பாடலில் இரண்டாம் அடியில் பாதிக்கு மேலும், 490 - ஆம் பாடலில் இரண்டாம் அடியில் பாதிக்கு மேலும் மூன்றாம் அடி முழுதும் கிடைக்கவில்லை. ஆனால், தென்காசிச் சுப்பையாப் பிள்ளை யவர்களின் வீட்டுச் சுவடியில் மட்டும், கூடுதலாக ஆறுபாடல் கள் இருப்பதாக உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தெரிவித்து, அவர்தம் பதிப்பின் இறுதியில் அந்த ஆறு பாடல்களையும் தத் துள்ளார்கள், ஐங்குறு நூற்றில் முழுதும் கிடைக்காத 129, 130 ஆம் பாடல்கள் இரண்டும் கிழவற்கு உரைத்த பத்தைச் சேர்ந்தவை அந்தப் பத்தின் முதல் எட்டுப் பாடல்களுமே கண்டிகு மல்லமோ கொண்க நின் கேளே' என்பதையே முதல் அடி யாகக் கொண்டுள்ளன. எனவே, கிடைக்காத இறுதிப் பாடல் கள் இரண்டிலுங்கூட அந்த அடியே முதல் அடியாக இருக்க வேண்டும். சுப்பையாப் பிள்ளை வீட்டுச் சுவடியில் கூடுதலாக