பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 . . தமிழ் நூல் தொகுப்புக் கலை 'அளவு இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவ்வ ளவு ஏன்? பிறந்த குழந்தைக்கும் தாலாட்டுப் பாட்டு; இறந்து கிடக்கும் குழந்தைக்கு மட்டுமல்ல-உடலை எடுத்துப் போன பின்னரும் ஒப்பாரிப் பாட்டு எனில், பாடல் கலையோடு மக்க ளுக்கு உள்ள மிக நெருங்கிய தொடர்பு நன்கு புலனாகும். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை யாது? மற்ற மற்றக்கலைகள் உயர்நிலையில் உள்ளவர்களைக் கவர, பாடற்கலையோ எளிய நிலையிலுள்ள பாமர மக்களையும் கவர்வதால், இது மக்கள் கலையாகும்-அதாவது, பொதுமக் களின் பொதுக்கலையாகும்' என்பதுதான்! மக்கள் கலை மட்டுமா? பாடற்கலை மக்கள்கலை மட்டுமா? மரஞ் செடி கொடி களையும் வள்ரச் செய்து வாழவைக்கும் மாண்புடைய கலை யன்றோ? பாட்டுக் கேட்டுப் பயிர் வகைகளும் செழிப்பதாக நாம் அறிகிறோமே! ஒரு கிழமையிதழில் ஒரு நகைச்சுவைப் படத்துனுக்குப் பார்த்த நினைவு. வருகிறது: ஒரு பக்கம் ஒரு பெரிய செடி இருக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு சிறிய செடி உள்ளது. பெரிய செடி சிறிய செடியைப் பார்த்து பின்வருமாறு கேட்கிறது:- *- f "நாம் இருவ்ரையும் ஒரே நாளில்தானே நட்டார்கள்! உனக்கும் பாட்டுப் பாடுகிறார்கள்; எனக்கும் பாட்டுப் பாடு கிறார்க்ள். அப்படியிருக்க, நான்மட்டும் பெரிதாய் உயரமாய் வளர்ந்திருக்கிறேன்; நீ மட்டும் ஏன் சிறிதாய்-குட்டையாய் இருக்கிறாய்?” * - இந்த்க் கேள்விக்குச் சிறிய செடி பின்வருமாறு பதில் சொல் கிற்து:- ". "உன் பக்கம் குமாரி ராதிகா பாடுகிறாள்; அதனால் நீ உயரமாய் வளர்ந்து விட்டாய். என் பக்கம் ஒரு கிழவி அல்லவா பாடுகிறாள்! நான் எப்படி உன்னைப்போல் உயர மாய் விளரமுடியும்?" இந்த வேடிக்கைத் துணுக்கால், பாடற்கலை மக்கள் கலை மட்டுமன்று, மரஞ் செடி கொடிகளுக்கும் மகிழ்வளிக்கும் மாபெருங்கலை என்பது போதரும்! .