பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


286 தமிழ் நூல் தொகுப்புக் கலை உள்ள ஆறு பாடல்களுள் எதிலும் அந்த அடி இல்லாமையால் கிடைக்காத (129,130) இருபாடல்கள், இந்த ஆறுபடால் களுள் இல்லை என்பது தெளிவு. மற்றும் இந்த ஆறு பாடல் களுள் முதல் நான்கு பாடல்களிலும், உள்ளார் கொல்லோ தோழி என்னும் தொடரே தொடக்கத்தில் உள்ளது. இவ் வாறு தொடங்கும் பத்துப் பாடல்கள் கொண்ட பத்து, ஒன்று இருந்ததென்பது இதனால் புலனாகலாம். எனவே, எண்ணிறந்த பத்துக்களுள் குறிப்பிட்ட ஐம்பது பத்துக்களைக் கூடலூர் கிழார் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஐங்குறு நூற்றை உருவாக்கினார் என நாம் கூறியது பொருத்தமே யாகும். ஆழ்வார் நாயன்மார் முதலிய பிற்காலத்தவரின் படைப் புக்களுள் ஒரு பொருள்பற்றிப் பத்துப்பாடல்கள் கொண்ட பத்துக்கள் பலவகைப் பாவினங்களால் இயற்றப்பட்டிருப்பினும், சங்ககாலப் பதினெண் கீழ்க் கணக்கைச் சேர்ந்த திருக்குறளி லும் நாலடியாரிலும் ஒரு பொருள் பற்றிய பத்துக்கள் வெண் பாப் பாடலால் ஆக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். ஆனால், சங்ககாலப் பதினெண் மேற்கணக்கைச் சேர்ந்த ஐங்குறு நூற்றிலும், பதிற்றுப் பத்திலும், ஒரு பொருள் பற்றிய பத்துக் கள்’ ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது இதனை, நச்சினார்க்கினியர், 'தொல் காப்பியம்-செய்யுளியலில் 'தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்று தொடங்கும் (149 -ஆம்) நூற்பாவின் கீழ்வரைந்துள்ள, 'இவ்வாறு கொச்சகத்தினை வரைந்தோதவே, ஆசிரியமும் வெண்பாவும் ஒரு பொருள்மேல் பல மூன்றும் ஐந்தும் ஏழும். ஒன்பதும் பத்தும் ஆகி வருதலும் பிறவாறாய் வருதலும் வரை யறை யிலதாயின்; அவை ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம், கீழ்க்கணக்கு முதலியவற்றுள்ளும், பிறவற்றுள்ளுங்காண்க என்னும் உரைப் பகுதியில் குறிப்பிட்டுள்ளமை காண்க. துறைத் தொடர்கள்: ஒவ்வொரு பாடலின் கீழும் துறைபோன்ற தொடர் எழுதப்பட்டுள்ளது. இது, பாடலின் உட்கிடையைச் சுருங்க அறிவிக்கின்றது. இத்தகைய துறைத் தொடர்களைப் பாட