பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு , - 287 லாசிரியர் எழுதினாரா, அல்லது தொகுத்தவர் எழுதினாரா என்பது புலப்படவில்லை. இவற்றைப் பின்வந்தவர் எவரேனும் எழுதியிருக்கலாம் என்று கூறினும் வியப்படைவதற்கில்லை. திணைப் பெயர் வழக்கு: அகநானூற்றுப் பாடல்கள் களிற்றியானை நிரை, மணி மிடை பவளம், நித்திலக் கோவை என்னும் மூன்று பிரிவினைப் பெயரால் தொல்காப்பிய உரையாசிரியரால் சுட்டப்பட்டிருப் பது போலவே, ஐங்குறு நூற்றுப் பாடல்களும் திணை பிரி வினைப் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியம் - உவம இயலிலுள்ள 'கிழவோட்டு உவம மீரிடத் துரித்தே' என்னும் (29 - ஆம்) நூற்பாவின் கீழ், பேராசிரியர், ஐங்குறு நூற்றின் நெய்தல் பகுதியிலுள்ள 'அன்னை வாழி வேண் டன்னை சுழிய' என்னும் (108-ஆம்) பாடல் முழுவதையும் தந்து, அப் பாடலின் கீழே, 'என்பது நெய்தல்' என்று எழுதி யுள்ளார், மற்றும் அதைத் தொடர்ந்தாற் போல், ஐங்குறு நூற்றின் குறிஞ்சிப் பகுதியில் உள்ள குன்றக் குறவன் புல்வேய் குரம்பை என்னும் (252-ஆம்) பாடல் முழுவதையும் தந்து, அதன் கீழே, "என்னும் குறிஞ்சிப் பாட்டினுள் வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல வாடை செய்யும் நோய் தீர்க்க வந்தானென்று உள்ளுறை யுவமஞ் செய்தவாறு கண்டு கொள்க." என்று, ஐங்குறு நூற்றுப் பாடலைக் குறிஞ்சிப் பாட்டு’ என்னும் பெயரால் வழங்கியுள்ளார். பத்துப்பாட்டில் ஒன்றா கிய குறிஞ்சிப் பாட்டு என்னும் தனிநூல் ஈண்டு நினைவுகூரத் தக்கது. இப்படியாகக் குழப்பம் ஏற்படும் என்பதற்காகத்தான், பத்துப் பாட்டைச் சேர்ந்த குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலைப் பெருங்குறிஞ்சி' என்னும் பெயரால் வழங்குவதுண்டு, இந்தச் செய்தி பத்துப் பாட்டு' என்னும் தலைப்பில் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. கலித்தொகையின் ஐந்து உட்பிரிவுகளும் பாலைக்கலி, குறிஞ்சிக் கலி, மருதக்கலி, முல்லைக் கலி, நெய்தல் கலி என வழங்கப்படுவதும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.