பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தமிழ் நூல்தொகுப்புக் கலை நூற்பெயருடன் செய்யுட்களைக் குறிப்பிடும் வழக்கமுடைய நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையில் ஏறக்குறைய இருபது இடங்கட்குமேல் ஐங்குறு நூறு, என்னும் பெயரை அப்படியே முழுதும் குறிப்பிட்டுள்ளார். முறை வைப்பு: தொல்காப்பியத்தில் மாயோன் மேய நடுவுநிலைத் திணையே என்னும் நூற்பாக்களில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசையில் ஐந்து திணை கள் சொல்லப்பட்டிருக்க, தொகை நூல்களில் இந்த முறை மாறியிருப்பினும் தவறில்லை; சொல்லிய முறையால் சொல்ல வும், படுமே” என்று தொல்காப்பியர் கூறியுள்ள சொல்லவும்’ என்பதிலுள்ள உம்மையால், இந்த முறையில் சொல்லாமல் வேறு முறையாலும் சொல்லலாம் என்பது பெறப்படுகிறதுஎன்னும் கருத்தை, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தொல்காப்பிய உரையில் கூறியிருக்கும் செய்தி, முன்பே 'நெடுந்தொகை' என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. மற்றும், இது சார்பாக ஐங்குறு நூற்றைக் குறிப்பிட்டே கலித்தொகை உரைத் தொடக்கத்தில் நச்சினார்க்கினியர் கூறி யுள்ள பகுதி வருமாறு: 'இனிச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்ற வழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்று பொருள் கொண்டமை பற்றி......ஐங்குறு நூற்றினும் பிறவற்றினும் வேறுபடக் கோத்தவாறுங் காண்க.-- இவ்வாறு ஐந்திணை முறைமாற்றம் பற்றிக் கூறியுள்ளார். மற்றும் நாற்கவிராசநம்பி அகப்பொருளின் அகத் திணையிய லில் உள்ள 'குறிஞ்சி பாலை. முல்லை மருதம் நெய்தல் ஐந்திணைக்கு எய்தியபெயரே' என்னும் (6-ஆம்) நூற்பாவின் கீழே பழைய உரையாசிரியர் வரைந்துள்ள, 'சொல்லிய முறையாற் சொல்லவும் படும்’ என்ற உம்மை யாற் பிறவாற்றானும் சொல்லப்படும் என்பதுபட நிற்றலா