பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


290 தமிழ் நூல் தொகுப்புக் கலை இருவரும் ஒருவரா அல்லது வெவ்வேறானவரா? இவ்விரு பெயர்களையும் இணைத்து "ஆதனவினி' என்று சிலர் எழுதி யுள்ளனர். இவ்வாறே 'ஆதன்' என்பதை முதலாகக் கொண்டு ஆதனழிசி, ஆதனெழினி, ஆதனுங்கன், ஆதனோரி முதலிய பெயர்களில் இன்னும் சிலர் உளர் நெடுவேளாதன்' என்ற தொரு பெயரும் புறநானூற்றில் (338) காணப்படுகிறது. மற் றப் பெயர்கள் ஒரு புறம் இருக்க,ஆதன்வினி என்னும் பெயரை மட்டுமே ஈண்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 'அவினி' என்னும் பெயர் ஐங்குறு நூற்றின் முதல் அடியில் தவிர, சங்க நூல்களில் வேறெதிலும் வந்திருப்பதாகத் தெரிய வில்லை. எனவே, ஆதனுக்கும் அவினிக்கும் தொடர்பிருக் கிறது. ஆதனும் அவினியும் ஒருவராயிருக்கட்டும்.அல்லது-உறவு கொண்ட இருவேறு சேரமன்னராயிருக்கட்டும்-அதுபற்றியும் நமக்குக் கவலை வேண்டா! 'ஆதன்' என்ற பெயர் வரையிலும் ஈண்டு எடுத்துக் கொள்வோம். இந்த ஆதன் யார்? - இந்த ஆதன் என்பவன், செல்வக்கடுங்கோ வாழியாதன்' என்னும் சேரமன்னனாய் ஏன் இருக்கக் கூடாது? இவன் கடுங்கோ வாழியாதன், செல்வக் கடுங்கோ, சேரமான் செல். வக் கடுங்கோ, சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்றெல்லாம் பெயர் வழங்கப்பெறுகிறான். இவன் பெயருக்கு இறுதியில் உள்ள 'வாழியாதன்' என்னும் பகுதியை உற்று நோக்கவேண்டும். இந்த வாழியாதன் என்னும் பெயர் இரட்டுற மொழிதலாக அமைந்து அழகு தரும்படி ஐங்குறு நூற்றுப் பாடல் வாழியாதன்' என்று தொடங்கப்பட்டதா? அல்லது,-'வாழியாதன்' என ஐங்குறு நூற்றில் ஒரு பத்து முழு வதும் திரும்பத் திரும்பச் சிறப்புற வாழ்த்தப்பட்டதனால், இவன் பெயருக்குப் பின்னால் 'வாழியாதன்' என்பது இணைக் கப்பட்டிருக்கக்கூடுமா? இந்த அமைப்புக்குப் பதிற்றுப் பத்தும் துணை செய்கிறது: பதிற்றுப் பத்தின் ஏழாம் பத்துக்கு உரியவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவன்மேல் இந்தப் பத்தைக் கபிலர்