பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு - 291 பாடியுள்ளார். இவர் இந்தப் பத்தின் மூன்றாம் பாடலின் இறுதியில், "ஆயிர வெள்ள ஆழி வாழி யாத வாழிய பலவே' என இவனை வாழ்த்தியுள்ளார். இதில் 'வாழி யாத' என்பது விளி போலவும் வாழ்த்துப் போலவும் இரட்டுற மொழிதலாக இருப்பது காண்க. குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவரின் புறநானூற்றுப்(387 - ஆம்) பாடலிலும், செல்வக் கடுங்கோ வாழியாதன்' என்னும் பெயர்த்தொடர் முப்பதாம் அடியாக அப்படியே முழுதும் உள்ளது. எனவே, ஐங்குறு நூற்றில் வாழி யாதன்' என்று வர்ழ்த்தப்பட்டிருப்பவன், செல்வக் கடுங்கோ வாழியாதனாக இருக்கலாமன்றோ? இவனைப் பற்றி இங்ே இவ்வளவு சொல்ல வேண்டியதின் காரணமாவது: சேர மன்னர்களுள், உதியஞ்சேரல் மரபினர், இரும்பொறை மரபினர் என இருவகையினர் இருந்தனர். இவர்களுள், செல் வக்கடுங்கோ வாழியாதன் இரும்பொறை மரபினைச் சேர்ந் தவன். ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் இரும்பொறை மரபைச் சேர்ந்தவன். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்குப் பின் யானைக்க்ட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். முன்னவனது ஆட்சிக்காலம் கி.மு. 87 முதல் கி.மு. 62 வரை என்றும், பின்னவனது ஆட்சிக்காலம் கி.மு. 62 முதல் கி.மு. 42 வரை என்றும் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். இந்தக் காலக்கணக்கு சிறிது முன்பின்னாக இருப்பினும், இந்த மன்னர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய உறவுமுறைத் தொடர்புஉண்டுஎன்பதில் ஐயமில்லை. எனவேதான், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறைய்ால் தொகுப்பிக்கப்பட்ட ஐங்குறுநூற்றில், 'வாழி யாதன்' என்று:தொடங்கும் மருதத்திணை முதலில் அமைக்கப் பெற்றது. இதனை நன்கு எண்ணிக் காண்க! மருதத்திண்ையை முதலில் வைத்ததில் இன்னும் ஒரு வாழ்த் துப் பொருத்தம் உள்ளது. இந்தத் திணையின் முதல் ப்த்தின்