பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


292 தமிழ் நூல் தொகுப்புக் கலை முதலடிகள்'வாழி யாதன் வாழி யவினி' என அரசனை வாழ்த்து கின்றன. இரண்டாம் அடிகளோ, பற்பல முறைகளில் பொது வாழ்த்துக்கள் அளிக்கின்றன. இது விளங்குவதற்காக, முதல் பத்தின் பத்துப் பாடல்களிலும் உள்ள இரண்டாம் அடிகள் முறையே வருமாறு: (1) கெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க." (2) விளைக வயலே வருக இரவலர்." (3) பால்பல ஊறுக பகடுபல சிறக்க." (4) பகைவர் புல் லார்க பார்ப்பார் ஒதுக.' - (5) பசியில் லாகுக பிணிசேண் நீங்குக.' (6) வேந்து பகை தணிக யாண்டுபல நந்துக." (7) 'அறம்கனி சிறக்க அல்லது கெடுக.' (8) அரசுமுறை செய்க களவுஇல் லாகுக.' (9) நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக! (10) மாரி வாய்க்க வளம்கனி சிறக்க, இந்தப் பத்து அடிகளும் பத்துப் பாடல்களின் இரண்டாம் அடிகளாகும். இந்த அடிகளிலுள்ள வாழ்த்துக்களினும், சிறந்த வாழ்த்துக்களை இன்னும் எங்கே காண முடியும் எனவே இத் தகைய வாழ்த்துக்கள் நிறைந்த தொடக்கத்தையுடைய மருதத் திணையை முதலில் வைத்தது மிகவும் பொருத்தமாகு மல்லவா? மற்றும், இந்தப் பத்தின் எல்லாப் பாடல்களிலும், எனவேட் டோளே யாயே யாமே என்பது மூன்றாம் அடியாகவும் என வேட்டேமே என்பது பாடலின் இறுதிப் பகுதியாகவும் அமைந் திருப்பது நயமாயுள்ளது. மாதிரிக்காக, இந்தப் பத்தின் முதல் பாடலும் இறுதிப் பாடலும் வருமாறு: (வேட்கைப் பத்து - முதல் பாடல்) 'வாழி யாதன் வாழி யவினி கெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க