பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 தமிழ் நூல் தொகுப்புக் கலை மூன்றாவதாகக் குறிஞ்சித் திணை வைக்கப் பெற்றுள்ளது. இதைப் பாடியவர் கபிலர். இவர் சங்கப் புலவர்களுள் தலைமைப் புலவர் ஆவார். பரிபாடல் தவிர மற்ற எல்லாத் தொகை நூல்களிலும் இவர் பாடல்கள் உள்ளன. மேலும், குறிஞ்சியில் மிக வல்லுநர் இவர், எனவே, கபிலரைச் சிறப் பிக்கும் முகத்தான், குறிஞ்சித் திணைக்கு நடுவிடம் கொடுத் ததில் வியப்பில்லை. குறிஞ்சித் திணையின் முதல் பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் அன்னாய் வாழி வேண்டன்னை' என் லும் வாழ்த்தொலியுடன் தொடங்கப் பட்டிருப்பதும், அத னால் அந்தப் பத்து அன்னாய் வாழிப் பத்து என்னும் பெயர் பெற்றிருப்பதும் இவண் குறிப்பிடத்தக்கது. - இன்னும் எஞ்சியிருப்பன பாலைத் திணையும் முல்லைத் திணையுமாகும். இவற்றுள், பாலை என்பது பிரிவு பற்றியது; முல்லை என்பது பிரிந்த பிறகு ஆற்றியிருப்பது. பிரிந்தபின் தானே ஆற்றியிருப்பது? எனவே, இவ்விரண்டனுள் LffᎢ Gö] Gü முதலுரிமை பெற்று ஐங்குறு நூற்றில் நான்காவதிடம் பெற்றுள்ளது. எஞ்சிய முல்லை ஐந்தாவதாக இறுதியில் இருத்தப் பெற்றது. இவ்வாறு கூர்ந்து நோக்குவார்க்கு, ஐங்குறு நூற்று ஐந்திணை முறை வைப்பிற்குரிய பொருத்தமான காரணம் புலப்படாமற் போகாது. ஐங்குறு நூற்று அமைப்பும் தொகுப் பும் மிகவும் நயந்து வியந்து சுவைத்தற்குரியன. 22. பதிற்றுப் பத்து பெயர் வைப்பு 'பதிற்றுப் பத்து' என்பது ஒருவகைப் பெருக்கல் வாய்ப்பாடு ஆகும் - அதாவது பத்தாவது பெருக்கல் வாய்ப் பாட்டில் ஒரு கூறு ஆகும். இதன் விடை நூறு. பதிற்றுப் பத்து என்பதற்கு, 'பத்தால் பெருக்கப்பட்ட பத்து' என்பது பொருள். பத்தால் பெருக்கப்பட்ட பத்து (10x10=100) நூறு அல்லவா? இங்கே,