பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப் பத்து 295

  1. பதிற்று' என்பதிலுள்ள, 'இற்று' என்னும் சாரியை, x’ என் னும் பெருக்கல் குறியின் பொருளில் அமைந்திருக்கிறது. எனவே, பதிற்றுப் பத்து என்பது நூல் பாடல்கள் கொண்ட நூல் என்பது புலனாகும்.

இந்நூல், இறையனார் அகப்பொருள் உரையில் பதிற்றுப் பத்து' என்னும் பெயருடன் ஆறாவதாக அமைந்துள்ளது. நெடுந்தொகை நானுாறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு என்னும் எண்ணுப் பெயர் நூற்பெயரின் பிற்பாதியாக உள்ளது. ஐந்தாவது நூலாகிய ஐங்குறு நூற்றின் பெயர் முழுவதுமே ஐந்நூறு என எண்ணுப் பெயராக உள்ளது. ஐந்தாவதைப் போலவே, ஆறாவதாகிய பதிற்றுப் பத்தும், பத்துப் பத்து - அதாவது-நூறு எனப் பெயர் முழுவதும், எண்ணுப் பெயரால் அமைந்துள்ளது. இவ்வாறு, வெற்று எண்ணுப் பெயர்களை நூல்களின் பெயர்களாக வைத்திருப்பது வியப்பா யிருக்கிறதல்லவா ? இந்த அமைப்பு நமக்கு அறிவிப்பதாவது:-அந்த நானூறுஇந்த நானூறு என முதல் நான்கு நூல்கட்கும் நானுாறு என்னும் பெயர் வழங்கப் பட்டு விட்டதால், ஐந்நூறு பாடல் கொண்ட ஐந்தாவது நூல் வெற்றுபடியாக ஐங்குறுநூறு என, அதாவது-ஐந்துாறு எனப் பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, அடுத்த ஆறாவது நூல் நூறு பாடல்கள் கொண்டிருப்பதால், வெற்றுபடியாகவே பதிற்றுப் பத்து (நூறு) எனப் பெயர் வழங்கப்பட்டது. இதைக் கொண்டு, நானுாறு பாடல்கள் கொண்ட நான்கு நூல்களும் முதலில் பெயர் வைக்கப்பட்டன. அவற்றிற்குப் பின்னால் ஐங்குறு நூறு பெயர் வைக்கப்பட்டது; அதற்குப் பின்னால் பதிற்றுப் பத்து பெயர் வைக்கப்பட்டது :-என உணரலாம். - நச்சினார்க்கினியர் தம் உரைகளில், பல இடங்களில் பதிற்றுப் பத்துப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள் ளார்: தொல்காப்பிய உரையில் ஏறக்குறையப் பத்து இடங் களில் பதிற்றுப் பத்து என்னும் நூற்பெயரையும் சுட்டிக் காட்டியுள்ளார்.