பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை பாட்ற் கலையின் தோற்றம்: உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் எண்ணற்ற பாடல் கள் உள்ளன-எண்ணிறந்த பாடல் இயற்றும் முறையை அறி விக்கும் பல இலக்கண நூல்கள் உள்ளன. குறிப்பாகத் தமிழ் மொழியை எடுத்துக்கொள்ளின், ஒவ்வொரு பாடலுக்கும் உரிய இலக்கணிம் பரந்துபட்டது. ஓர் ஒப்பீடு (Comparison) வேண்டு மெனில்-பிரெஞ்சு மொழிப்பாடல் இலக்கணத்திலும், தமிழ் மொழிப்பாடல் இலக்கணம் மிகவும் கடுமையானது. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது எனப்படும் தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலில், பாடல் இயற்றும் முறைகளை அறிவிப் பதற்கென்றே, செய்யுள் "இயல் என்னும் ஒரு பகுதி ஆசிரியர் தொல்காப்பியனாரால் அமைக்கப் பெற்றுள்ளது. அந்தப் பகுதி யில் தொல்காப்பியர், தமக்கு முன்னாலேயே புலவர்கள் பலர் செய்யுள் இலக்கணம் எழுதியிருப்பதாகப் .பல இட்ங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். _ - “நல்லிசைப் புலவர். வகுத்துரைத்தனரே' (1) "யாப்பென மொழிய யாப்பறி புலவர்” (74) "பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே” (94) இதன்ன நோக்குங்கால், பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழ் மொழியில் செய்யுள்கள் பலவும், செய்யுள் இலக்கண நூல்கள் பலவும் தோன்றியிருந்தமை புலனாகிறது. இதனை இன்னும் நன்கு தெளிய விரும்பின், தொல்காப்பியருடன் பயின்ற நண்பராகிய பனம்பாரனார் என்பவர் தொல்காப்பியத் திற்குத் தந்துள்ள சிறப்புப் ப்ாயிரச் (மதிப்புரைச்) செய்யுளில் உள்ள, # • . * ..தமிழ் கூறும் நல்லுல கத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய கிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலங் தொகுத் தோனே............... தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே.