பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தமிழ் நூல் தொகுப்புக் கலை புறத்திணை - முதல் ஐந்து நூல்களைப் போலவே பதிற்றுப் பத்தும் ஆசிரியப் பாவால் ஆனது. புறநானூற்றைப் போலவே பதிற் றுப் பத்தின் பாடல்கட்கும் அடிவரையறையில்லை. பதிற்றுப் பத்தும் புறநானூறு போலவே புறப்பொருள் பற்றிய தொகை நூலாகும். ஆனால், புறநானூற்றில் புறப் பொருளுக்கு உரிய பன்னிரண்டு திணைகளும் ஏறக்குறைய உள்ளன; பதிற்றுப் பத்தில் அவ்வாறு இல்லை. பதிற்றுப் பத்துப் பாடல்கள் அனைத்தும், மன்னர்கள் பதின்மரைப் புலவர்கள் பதின்மர் புகழ்ந்து பாடிய பாடாண் பாட்டுக் களாகும். எனவே, புறப் பொருளுக்குரிய பன்னிரு திணைகளுள் பாடாண்திணை ஒன்றையே பதிற்றுப்பத்துப் பாடல்கள் சார்ந்தவை என்பது புலனாகும். பதிற்றுப்பத்துப் பாடல்களில் மன்னர்களின் போர்ச் செய்திகள் விவரிக்கப் பட்டிருப்பதால், அப்பாடல் களுள் சில, வஞ்சி உழிஞை வாகை போன்ற வேறு சில திணை களைச் சேர்ந்த வைபோல் தோன்றினும், மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றிருத்தலின் அவையனைத்துமே பாடாண் திணையே யாகும். இதனை நச்சினார்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார். தொல்காப்பியம்-புறத்திணையியலில் உள்ள 'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே' என்னும் (25-ஆம்)நூற் பாவின் உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர், அவலெறி யுலக்கை வாழைச் சேர்த்தி’ என்னும் பதிற்றுப்பத்துப் (29) பாடல் முழுவதையும் எடுத்துத் தந்து அப் பாடலைத் தொடர்ந்து. இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் பாலைக் கெளதமனார் துறக்கம் வேண்டினார் என்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின், இது வஞ்சிப் பொருள் வந்த பாடாண் ஆயிற்று. இலங்கு தொடி மருப் பின், என்னும் பதிற்றுப் பத்து, உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும், பதின்றுலாம் பொன் பரிசில் பெற்றமையின் பாடாண் ஆயிற்று." என்று வரைந்துள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து, பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே' என்னும் (63 - ஆம்)