பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/321

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப் பத்து 297 பதிற்றுப் பத்துப் பாடல் முழுவதையும் தந்து, அதன் கீழே, 'இது வாகைத் துறைப் U7-767 பாட்டு. இப் பதிற்றுப் பத்து நூறும் இவ்வாறே வருதலின் பாடாண் திணையே யாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க" என்று எழுதியுள்ளார். நச்சினார்க்கினியரின் இவ்வுரைப் பகுதியால், பதிற்றுப் பத்து முழுவதும் பாடாண் திணை என் பது உறுதிப்படும். ‘புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க” என்று, அவர் ‘புறத்துள்ளும்’ எனச் சுட்டியிருப்பது புறநானூற்றையாகும். பன்னிரண்டு திணைகளும் அமைத் துள்ள புறநானூற்றில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட (137) பாடல்கள் பர்டாண் திணையைச் சார்ந்தவை என்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. நூல் அமைப்பு பதிற்றுப் பத்து பத்துப் பத்துப் பகுதிகள் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால், ஒவ்வொரு பகுதியும் ஒரு 'பத்து' என வழங்கப்படுகிறது. எனவே, பத்துப் பத்துக்கள் கொண்டது பதிற்றுப் பத்து என் பது புலப்படும். இக் காரணம்பற்றியும் பதிற்றுப் பத்து" என் னும் பெயர் வழங்கப்பட்டது எனலாம். ஐங்குறு நூற்றில் ஐம்பது பத்துக்கள் உள்ளமை போலப் பதிற்றுப் பத்தில் பத்துப் பத்துக்கள் உள்ளன. இந்தப் பத்து முறையைப் பார்த்தே பிற்காலத்தார், அந்தப் பத்து-இந்தப் பத்து எனப் பல பத்துக் கள் பாடலாயினர். ஐங்குறு நூற்றில் 'தொண்டிப் பத்து அந்தாதித்தொடை யாய் இருப்பது போலவே, பதிற்றுப் பத்தில் நான்காம் பத்து அந்தாதித் தொடையாய் உள்ளது. இந்தப் பத்தில் முதல் பாட்டின் இறுதி, 'மாண்டனை பலவே' என்பதாகும்; இரண் டாவது பாட்டின் முதலும், மாண்டனை பலவே' என்பதா கும்; இரண்டாவது பாட்டின் இறுதி இறும் பூதாற் பெரிதே' என்பது; மூன்றாவது பாட்டின் முதலும் இறும் பூதாற் பெரிதே' என்பதாகும். இவ்வாறு பத்துப் பாடல்களும் சங்கி