பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


298 தமிழ் நூல் தொகுப்புக் கலை லித் தொடர்போல் அந்தாதித் தொடையாய் அமைந்துள்ளன. பதிற்றுப் பத்தின் இந்த அந்தாதி அமைப்பைப் பார்த்துத் தான், பிற்காலத்தில் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின போலும். எடுத்துக்காட்டர்க, - மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன காண்க. அந்தாதித் தொடையில் பத்துப் பாடல்கள் மட்டும் கொண்ட சிறுநூல், 'பதிற்றந்தாதி எனப்படும் என இலக்கண விள்க்கிப் பாட்டியல் கூறுவதும், பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தால் பெற்ற படிப்பினையே போலும்! வெண்பாப் பத்துக் கலித்துறைப் பத்துப் பண்புற மொழிதல் பதிற்றந் தாதி என்பது இலக்கண விளக்கப் பாட்டியல். (81 - ஆம் நூற்பா.) பதிற்றந்தாதியைப் போலவே, ஒருபா ஒருபஃது: என்னும் நூர்லின் தோற்றமும் இத்தகைய படிப்பின்னயின் விள்ைவே! ஆசிரியமோ, வெண்பாவோ, கலித்துறையோ அந்தாதித் தொடையில் பத்துப் பாடப்பெறின் ஒருபர் ஒரு பஃது எனப் படும், இதனை, வெள்ள்ை ஆதல் அக்வல் ஆதல் தள்ளா ஒருபது ஒருபா ஒருப.து. என்னும் பன்னிருபாட்டியல் (219-ஆம்) நூற்பாவாலும், ‘அகவல் வெண்பாக் கலித்துறை யதுகொண்டு ஒருபா ஒருபஃது உறின் அப் பெயராம்' என்னும் இலக்கண விளக்கப் பாட்டியல் (451-ஆம்) நூற்பாவா லும் அறியலாம். எடுத்துக்காட்டாக,-பட்டினத்தார் இயற் றிய திருவொற்றியூர் ஒருப்ா ஒருபஃது என்னும் சிறு நூலைக் காண்க. இதில், பத்து ஆசிரியப்பாக்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இவ்வாறாகப் பிற்காலத்தில் பல நூல்கள் தோன்றுவதற்குப் பதிற்றுப்பத்து முன்னோடியாக இருந்தது என்பதை அறியும் போது, இத்தொகை நூலின் இன்றியமையாமை விளங்குகிறது.