பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப் பத்து 299 இந்த நூலில் ஒவ்வொரு பத்தின் தொடக்கத்திலும் 'பதிகம் என்னும் பெயரில் ஒரு பகுதி உள்ளது. இதில், பாடிய வர் ப்ெயர், பாடப்பட்டவர் பெயர், அவரது ஆட்சியாண்டு, பர்டல் தலைப்புக்கள், பெற்ற பரிசு முதலிய விவரங்கள் தரப் பட்டுள்ளன. ஒவ்வொரு பத்திலும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் ஆகியவை தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக,- இரண் டாம் பத்தின் முதல்பாட்டின் இறுதியில், துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ண்ம்: ஒழுகு வ்ண்ணம். தூக்கு: செந்த்ாக்கு பெயர்: புண்ணுமிழ் குருதி. என்று கொடுக்கப்பட்டிருப்பது காண்க. அடுத்து.-ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பாடப்பட்டவ்ர் பெயரும், பாடியவர் பெயரும், பாட்டு எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன. எடுத் துக்காட்டாக,-இரண்டாம் பத்தின் இறுதியில், "இமய வரம்பன் நெடுஞ்சேர்லாதனைக் குமட்டுர்க் கண் ணன்ார் பாடினார் பத்துப்பாட்டு முற்றும்’- - என்றிருப்பது காணலாம். இந் நூலுக்குப் பழைய உர்ை ஒன்று உள்ளது. அந்த உரையில்லாத் ஒலைச் சுவடிகளில் பதிகம்’ என்னும் பகுதி எந் தப் பத்தின் முன்னாலும் இல்லை. எனவே, இந்தப் பதிகங்கள், நூலாசிரியர்களாலோ அல்லது நூலைத் தொகுத்தவராலோ இயற்றப் படவில்லை; பின்னால் வந்த உரையாசிரியராலோ அல்லது வேறு யாராலோ இயற்றப்பட்டிருக்க வேண் டும்-என உணரலாம். இந்தப் பதிகங்கட்கும் பழையவுன்ர இருப்பதால், அந்த உரை எழுதும்போது பதிகங்களும் இருந் தமை புல்ப்படும். ஆனால், உரையில்லாமல் பாடல்கள் மட் டும் உள்ள ஒலைச்சுவடிகளில் தூக்கு, வண்ணம், துறை, பெயர் ஆகியவையிருப்பதால், இவற்றைப் பாடலாசிரியரோ அல்லது நூல் தொகுத்தவரோ எழுதியிருக்க வேண்டும் எனத் தெளியலாம். ஆகவே, பதிகங்கள் மட்டும், நூல் தொகுத்த