பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/324

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


300 - தமிழ்நூல் தொகுப்புக் கலை பின்னர், பிற்காலத்தார் ஒருவரால் இயற்றப் பட்டன என்ப தும் தெளிவாகிறது. இந்தப் பதிகப்பகுதிகளை நச்சினார்க்கினி யர். அடியார்க்கு நல்லார் முதலியோர் எடுத்தாண்டிருப்பதால், பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்பே இந்தப் பதிகங்கள் இயற்றப் பட்டன என்பதும் தெளிவு. - பாடினோரும் பாடப்பட்டோரும்: பதிற்றுப்பத்தின் முதல்பத்தும் இறுதிப்பத்தும் இந்நாள் வரையும் கிடைக்காமையால், அவை, யாரப்ைபற்றி யாரால் பாடப்பட்டன என்று அறிய முடியவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துக்கட்கும் பாடினோர் பெயரும் பாடப்பட்டோர் பெயரும் அரசரது ஆட்சி ஆண்டுக் காலமும் தெரிகின்றன. அவை முறையே வருமாறு: இரண்டாம் பந்து: இமயம்வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டுர்க் கண்ணனார் பாடியது. இம் மன்னன் ஆண்ட மொத்த ஆண்டுக்காலம்: ஐம்பத் தெட்டாண்டு. மூன்று: பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கெளதமனார் பாடியது. ஆட்சிக்காலம்: இருபத்தைந் தாண்டு. - நான்கு: களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலைக் காப்பி, யாற்றுக் காப்பியனார் பாடியது. இருபத்தைந்தாண்டு. ஐந்து: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர் பாடியது. அரசனது ஆட்சிக்காலம்: ஐம்பத்தைந்தாண்டு. ஆறு: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது. ஆட்சி: முப்பத்தெட் டாண்டு. - - ஏழு: செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர்பாடியது. ஆட்சி: இருபத்தைந்தாண்டு. - எட்டு: தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடியது. ஆட்சிக்காலம்: பதினேழாண்டு. ஒன்பது: குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப்