பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 தமிழ் நூல் தொகுப்புக் கலை எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஒன்பதாம் பத்தில் இடம் பெற்றுள்ளான். எனவே, ஏழு - எட்டு, ஒன்பதாம் பத்திற்கு உரியவர்கள், தந்தையும் - மைந்தனும் பாட்டனும் - பேரனுமா கிய உறவு முறையினர் என்பது பெறப்படும். இந்த அமைப்பைக் கொண்டு, பதிற்றுப்பத்தின் முதல் பத்திற்கும் பத்தாம் பத்திற்கும் உரிய சேர மன்னர்களை உய்த்துணரலாம். இரண்டாம் பத்தின் தலைவனாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியஞ்சேரலின் மைந்தனா கையால், முதல் பத்தின் தலைவன் உதியஞ்சேரலாகத்தான். இருக்கக்கூடும்,எனக் குழந்தையும் கூறமுடியுமே! இமயவரம் பன்றின் இளவலும் மக்களும் அடுத்தடுத்த பத்துக்களில் இடம் பெற்றிருப்பத்ால், அவன் தந்தை உதியஞ்சேரல் முதல் பத்திற்கு, உரியவனாயிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், எப் படியோ முதல்,பத்துக் காணாதொழிந்திது. இதன் ஆசிரியர் பெயரை அறிவது அரிது, r இவ்வாறே பத்தாம் பத்தின் தலைவனையும் கண்டுபிடிக்க முடியும். ஏழு-எட்டு-ஒன்பதாம் பத்துக்களின் தலைவர்கள் இரும்பொறை மரபினர் என அறிந்தோம். எனவே, பத்தாம் பத்தின் தலைவன் இரும்பொறை மரபினனாகவே இருத்தல் கூடும். முற்கூறிய மூவரே யன்றி, இரும்பொறை மரபைச் சேர்ந்த மற்ற மன்னர்களுள், இரும்பொறை' என்னும் குடிப் பெயருடன் கூடியவர்கள், கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் இருவரே யாவர். இவர்களுள் பின்னையோனினும் முன்னையோனே. தலைசிறந்தவனாகப் பாராட்டப் பெற்றுள்ளான்; இரு ம் பொறை மரபைச் சேர்ந்த மற்ற மன்னர்களுக்குள்ளும், இவனே. தமிழோடும்-தமிழ்ப் புலவர்களோடும் மிகுதியாகத் தொடர்பு கொண்டுள்ளான்; மற்ற இரும்பொறை மன்னர்களினும் இவனே மிகுந்த புலவர்களால் பாடப் பெற்றுள்ளான், இவ்னைக் கூடலூர் கிழார். குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங் கீரனார் முதலியோர் பாடியுள்ளனர்; கூடலூர் கிழாரைக் கொண்டு ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்த தனிப் பெருமையும்