பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தமிழ் நூல் தொகுப்புக் கலை யாமும் பிறரும் பல்வேறு இரவலர். அழிந்த நெஞ்சம் மடியுள்ம் பரப்ப அஞ்சினம் எழுநாள் வந்தன் றின்றே. தன்துணை யாயம் மறந்தனன் கொல்லோ பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை மணிவரை யன்ன மாஅ யோனே! பதிற்றுப்பத்தின் மற்ற மன்னர்களைப் போலவே, யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் வரை யறையில்லாத வள்ளன்மை யுடையவன் என்றும், அதனால் இவன் பத்தாம் பத்தின் தலைமைக்குத் தக்கவன் என்றும், மேற்காட்டியுள்ள புறப்பாடலின் பகுதியால் உய்த்துணரலாம். பதிகங்கள்: பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்திற்கும் முன்னால் ஒவ் வொரு பதிகம் இருப்பதாக முன்பு கூறினோம். இப்பதிகங்கள் நூல் தொகுக்கப்பட்ட பின் எழுதப்பட்டவை எனப்படினும், நூல் தொகுப்பிற்குப்பின் பலகாலம் சென்று எழுதப்பட்டிருக்க மாட்டா. நூல் தொகுப்பை யடுத்தே எழுதபட்டிருக்கக் கூடும். இற்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்தைஞ்ஞாறு ஆண்டுகட்கு முன்பே எழுதப்பட்டதால்தான் இப் பதிகங்களில் போதிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் பதிகங்கள் இல்லையேல், இந்நூலைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் அறிய முடியாது. இதை விளங்கச் செய்ய, மாதிரிக்காக இரண்டாம் பத்தின் முகப்பில் உள்ள பதிகப் பகுதி வருமாறு: 'இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை ஆசிரியர்' குமட்டுர்க் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து. பதிகம் “மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு * வெளியன் வேண்மாள் நல்லினி யின்றமகன் அமைவரல் அருவி இமையம் விற்பொறித்