பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப்பத்து 305 திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் கிlஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபின் ஆரியர் வணக்கி நெய்தலை பெய்து கையிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி அமையார்த் தேய்த்த அணங்குடை கோன்றாள் இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக் குமட்டுர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம். புண்ணுமிழ் குருதி, மற்ம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளனுறு பைதிரம், அட்டு மலர் மார்பன்-இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐஞ்னுாறுர் பிரம தாயம் கொடுத்து முப்பத்தெட்டி யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக்கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்.' மேலுள்ளது பதிகப் பகுதி; அஃதாவது-பாடலாடிய உரைநடையாலும் எழுதப்பட்டுள்ளது. இதே மாதிரியில் பன னுள்ள பதிகங்களும் இருக்கின்றன. மேலுள்ள பதிகததவ பாடல் பகுதியில், இந்தப் பத்துக்கு உரிய அரசன் இமயவரம்பன நெடுஞ்சேரலாதன் என்பதும், அவன் பெற்றோர் உதியஞ்சேரல் - வேண்மாள் நல்லினி என்பதும், அவன் பெற்ற வெற்றிச் சிறப்புக்களும் விவரிக்கப்பட்டுள்ளன. பாட்டுப் பகுதியைத் தொடர்ந்து உரைநடையாக உள்ள மூன்று பத்திகளுள், முதல் பத்தியில், பாடலாசிரியரின் பெயரும், பாட்டு எண்ணிக்கையும் ஒவ்வொரு பாட்டின் பெயரும் கூறப்பட்டுள்ளன; இரண்டாம் பத்தியில், பாடிப்பெற்ற பரிசு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது; மூன்றாம் பத்தியில் அரசன் ஆட்சிசெலுத்திய மொத்த ஆண்டுக் காலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னுள்ள எல்லாப் பதிகங் களிலும் இதேபோன்ற முறை கட்டுப்பாடாய்க் கையாளப்பட்