பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தமிழ் நூல் தொகுப்புக் கலை டுள்ளது. இப் பதிகங்கள் வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படுவன வன்றோ? - - பதிகப் பகுதியில் பத்துப் பாடல்களின் பெயர்களும் குறிப் பிடப்பட்டுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலது. பாடலில் உள்ள சிறப்புத் தொடர் ஒன்று பாடலின் பெயராக அமைக்கப்பட்டுள் ளது. முதல் பாடலில், 'வருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதி யின் என்னும் எட்டாவது அடியிலுள்ள 'புண்ணுமிழ் குருதி' என் னும் சிறப்பான பொருள்பொதிந்த தொடர் அப்பாடலுக்குப் பெயராக்கப்பட்டுள்ளது. சங்கப் புலவர்களுள் சிலர், அவரவர் பாடலில் உள்ள சிறப்புத் தொடரால் பெயர் பெற்றுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. ஐங்குறு நூற்றில் பல பத்துக் கள் சிறப்புச் சொல் அல்லது சிறப்புத் தொடரால் பெயர் பெற்றுள்ளமையும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. பிற்காலத் தெழுந்த நூல்கள் சிலவற்றில் பாடலின் முதல்சொல் அல்லது முதல்தொடர் பெயராய் அமைந்திருப்பது, பதிற்றுபத்தும் ஐங்குறுநூறும் அளித்த படிப்பினையா யிருக்கலாம். பதிற்றுப் பத்துப் பதிகங்களின் அமைப்பைப் பார்த்துப் பிற்காலத்தினர் பெற்ற படிப்பினைகள் இன்னும் சில உண்டு. பிற்காலச் சோழவேந்தர்களின் கல்வெட்டுகளின் தொடக்கத் தில், மெய்க்கீர்த்தி என்னும் பகுதியொன்று இருக்கக்காணலாம். இந்த மெய்க்கீர்த்தியில் மன்னரது படை வீரம்,கொடைவீரம், இன்ன பிற சிறப்புக்கள், ஆட்சியாண்டு முதலியவை கூறப் பெற்றிருக்கும். இந்த மெய்க்கீர்த்தியமைப்பு, முதல் முதலாக முதலாம் இராசராசசோழனின் கல்வெட்டுகளில்தான் காணப் படுகிறது. இந்த மெய்க்கீர்த்தி, பதிற்றுப் பத்துப் பதிகப் பாடல்கள் போலவே இருப்பதால், அந்தப் பதிகங்களைப் பார்த்தே அதேமாதிரியில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும். முதலாம் இராசராசன் பத்தாம் நூற்றாண்டுக் காரனாதலால், பத்தாம் நூற்றாண்டுகட்கும் பல நூறாண்டுகட்கு முன்பே பதிற்றுப் பத்தின் பதிகங்கள் எழுதப்பட்டுப் பரவலாகப் பயன் தந்து வந்தன என்பது புலனாகலாம். பதிற்றுப் பத்துப் பதிகம் தந்த அடுத்த படிப்பினை வரு மாறு:-பதிற்றுப்பத்தில் பத்துப் பாடல்கள் கொண்ட ஒவ்