பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப்பத்து - - 301 வொரு பத்துக்கும் முன்னால் உள்ள பதிகம் என்னும் பெய ரைப் பார்த்து, பிற்காலத்தவர், பத்துப் பாடல்கள் கொண்ட சிறுசிறு மடல்களுக்குச் (சிறு நூல்களுக்குப்) பதிகம் என்னும் பெயர்வைக்கத் தொடங்கிவிட்டனர். அந்தப் பதிகம்-இந்தப் பதிகம் என இந்தக் காலத்தில் ஆயிரக் கணக்கான பதிகங் களைக் காணலாம். ஒவ்வொரு பதிகத்திலும் பத்துப் பாடல் கள் இருக்கும். பதிகம் என்னும் சொல்லுக்குப் பத்துக் கொண் டது எனப் பொருள் செய்து ஏராளமான பதிகங்களை இயற் றித் தள்ளியுள்ளனர். மற்றும், பதிகம்' என்னும்சொல் பதியம் என மாறிப் 'பாட்டு என்னும் பொருளில், 'அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையில் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்' என அண்டாளின் திருப்பாவைத் தனியனில் ஆளப்பட்டிருப் பதும் ஈண்டு எண்ணத் தக்கது. இந்தக் தனியன் ஒன்பதாம் நாற்றாண்டில் உய்யக்கொண்டார் என்பவரால் இயற்றப் பெற்றதாகும். . பதின்மூன்றாம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர், நன்னூல் - பொதுப் பாயிரம் முதல் நூற் பாவில், பாயிரம் என்பதற்கு உரிய வேறுபெயர்களுள் ‘பதிகம்’ என்பதும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்; "முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துறை பாயிரம்' என்பது அந் நூற்பா இதன் விருத்தியுரையில் பதிகம் என்னும் சொல்லை விளக்கவந்த சங்கர நமச்சிவாயர், பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகச் சொல்லுதல் தானேஎன்பவாகலின்...பல்வகைப் பொருளையும் தொகுத்துச் சொல் லுதலின் பதிகமென்றும்.பெயராம் என்றவாறு”.- .