பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப்பத்து 309 பாடலை யடுத்துள்ள உரைநடைப் பகுதியில் வேறொரு வகை யான் விளக்கம் குறிப்பாகத் தரப்பட்டுள்ளது. இரண்டாம் பத்துப் பாடலை யடுத்துள்ள உரைநடைப் பகுதியை மீண்டும் காண்பாம்: 'குமட்டுர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம் வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயி லின் பாயல், வலம்படு வியன் பணை, கூந்தல் விறலியர், வள னறு பைதிரம், அட்டு மிலர் மார்பன் - இவை பாட்டின் பதி கம்’ இதில், 'பாடினார் பத்துப் பாட்டு' என்று பாடல் தொகை யைச் சொல்லி, பின்னர், அவை தாம்’ என்ற அந்தப் பத் துப் பாட்டுக்களின் பெயர்களைச் சொல்லத் தொடங்கி, புண் மிைழ் கருதி முதல் 'அட்டு மலர் மார்பன் வரையள்ள பாட் டின் பத்துத் தலைப்புப் பெயர்களைச் சொல்லத் தொடங்கி, 'புண்ணுமிழ் குருதி முதல் 'அட்டு மலர் மார்பன்' வரையுள்ள பாட்டின் பத்துத் தலைப்புப் பெயர்களையும் தந்து. இறுதி யில் இவை பாட்டின் பதிகம்' எனக் கூறியுள்ளமை காண்க. "இவை பாட்டின் பதிகம்' என்னும் தொடருக்கப் பொருள் என்ன? இவை என்பது, பத்துத் தலைப்புப் பெயர்களையும் குறிக்கிறது; பாட்டின்' என்பது, மேலே பாடினார் பத்துப் பாட்டு’ எனப்பட்டுள்ளதே-அந்தப் பத்துப் பாட்டையும் குறிக்கிறது; பதிகம்’ என்பது, பாட்டில் பகிந்துள்ள பொருள் பொதிந்த பகுதி என்னும் கருத்தை யறிவிக்கிறத; அதாவது பதிகம் என்றால் பதிந்திருப்பது' என்று பொருள் பண்ணக் கூடியதாயுள்ளது; செடி கொடிகளை ப் ய்திய வைப் பதற்குப் பதிபோடுதல்:- பதிவு போடுதல்-பதியம் போடுதல்என்றெல்லாம் பெயர் வழக்காறு உள்ளமை காண்க. மறைசை யந்தாதி என்னும் நூலில், இந்தப்பொருளில், பதிகம் பரிக்கும் குழல் (17) என்பதாகச் செய்யுள் வழக்காறு இருப்பதும் அறிக. எனவே, பதிற்றுப்பத்தில் உள்ள பதிகம் என்பதற்கு, பின் னால் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் முன்னால்