பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


310 தமிழ்நூல் தொகுப்புக் கலை சுருக்கமாகப் பதிந்திருப்பது என்று பொருள் கொள்ளலாம். பதிந்தது பதிகம். இந்தப் பொருளின் அடிப்படையிலேயே, நன்னூலில் பவணந்தியார், பாயிரத்திற்குப் பதிகம்' என்னும் பெயரும் உண்டு எனக் கூறியுள்ளார். இதற்கு மேலும் சான்று வேண்டுமாயின், மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் இருபெருங் காவியங்கட்குச் செல்ல லாம். மணிமேகலையில் முப்பது காதைகள் உள்ளன. இந்த முப்பது காதைகளையும் நூலுக்கு முன்னால் உள்ள பதிகம் என்னும் பகுதி குறிப்பிடுகிறது. இந்தப் பதிகம் என்னும் சொல்லுக்குக் கதை பொதி பாட்டு எனப் பொருள் கூறப்பட் டுள்ளது. தொண்ணுற்றெட்டு அடிகள் கொண்ட இந்தப் பதி கத்தில், காவியத்தின் உட்பொருள் முழுதும் சுருங்கத் தரப்பட் டுள்ளது. இந்தப் பதிகம் முப்பது காதைகளின் பெயர்களை யும் முதலில் கூறி, இறுதியில், "...இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு ஆறைம் பாட்டினுள அறியவைத் தனனென்.” என முடிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறே சிலப்பதிகாரத்தின் முன்னாலும் தொண்ணுாறு அடிகள் கொண்ட பதிகம் ஒன்றுள்ளது. இதில் சிலப்பதிகாரச் சுருக்கமும் நூலிலுள்ள முப்பது காதைப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. இறுதியில், “...இவ்வா றைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்." எனப் பதிகம் முடிக்கப் பெற்றுள்ளது. நூலின் உட்கிடையை முதலில் கூறி, இதுதான் பதிகம்' என இறுதி அடியில் குறிப் பிடப்பட்டிருப்பது காண்க. இதுகொண்டு, பதிகம் என்றால் என்ன என்பதை நன்கு தெளிந்து கொள்ளலாம்.