பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 311 இனி, பதிற்றுப் பத்தின் பதிகங்களின் இறுதியில் கூறப் பட்டுள்ள பரிசில் விவரம் முறையே வருமாறு: இரண்டாம் பத்து:-(முன்னரே கூறப்பட்டுள்ளது). மூன்றாம் பத்து:-பாடிப் பெற்ற பரிசில்; நீர் வேண்டியது கொண்மின் என, யானும் என், பார்ப்பணியும் சுவர்க்கம் புகல் வேண்டும். என பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வி யிற் பார்ப்பானையும் பார்ப்பணியையும் காணாராயினர்.' நான்காம் பத்து.-'பாடிப் பெற்ற பரிசில் நாற்பது நூறா யிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக்கோ." ஐந்தாம் பத்து:- பாடிப் பெற்ற பரிசில்; உம்பற் காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக்கோ. (மகனைக் கொடுத்தான் என்றால், மாணாக்கனாக ஒப்படைத்திருப்பான் என்று கருதலாம்.) ஆறாம் பத்து-பாடிப் பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறாயிரங் காண முங் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக்கோ.' ஏழாம் பத்து:-பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத் தான் அக்கோ.” - எட்டாம் பத்து:--பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மின் என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசு கட்டிற் கொடுப்ப, அவர், யான் இரப்ப இதனை யாள்க் என்று அமைச்சுப் பூண்டார். ஒன்பதாம் பத்து:- பாடிப் பெற்ற பரிசில்: மருளில் லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்திரா யிரம் காணங் கொடுத்து, அவர் அறியாமை வளரும் மனையும்,