பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


312 - தமிழ்நூல் தொகுப்புக் கலை வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப்பரப்பி எண்ணற்காகா அருங்கல வெறுக்கையோடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்பு மறம் தான் விட்டான் அக்கோ.' ஒவ்வொரு புலவரும் பெற்றுள்ள பரிசு விவரங்களைப் படிக்குங்கால் தலை சுற்றுகிறது. ஒருவர் அரசனைப் பத்து வேள்விகள் செய்யவைத்துத் கன் மனைவியுடன் சுவர்க்கம் போயுள்ளார். சுவர்க்கத்திலும் மனைவியைப் விட்டுப் பிரிய மனமில்லாத அவர் நல்லவர் போலும்! மற்றொருவர், அரச னது ஆட்சியில் பாதிப் பாகம் பெற்றுள்ளார். இன்னொருவர் மன்னன் மகனையே பெற்றுக் கொண்டுள்ளார்.வேறொருவர், ஈன்றின்மேல் ஏறிநின்று கண்ணில் தெரியும் பகுதியெல்லாம் எய்தியுள்ளார். ஒருவர். அரண்மனைப் பொருள்களுடன் அரசு கட்டிலும் கொடுப்பக் கொள்ளாது அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார். இன்னொருவர். தம்மூர் சென்ற பிறகு, தமக்குத் தெரியாமலே அங்கே முன்கூட்டி உரியவாக்கப் பட்டிருந்த ஊரும் மனையும் இன்ன பிறவும் எதிர்பாராது பெற்றுள்ளார். இவையன்றி, ஒவ்வொருவரும் கணக்கற்ற பொன்னும் பொரு |ளம் ஊர்களும் பெற்றுள்ளதாகப் பதிகங்களுள் பறைசாற்றப் படுகின்றன. இதனால், அன்று தமிழ்ப் புலவோக்க்கு இருந்த பெருஞ்சிறப்பும், மன்னர்களின் பெருவண்மையும் புலனாகும். ஆனால், இந்தப் பரிசு விவரங்களைச் சிலர் நம்பாமல் ஐயுறக் கூடும். இவை உண்மையே என்பது அறிஞர்களின் கருத்து. சான்றும் கூற முடியும். - - மூன்றாம் பத்தில் தன்னைப் பாடிய பாலைக் கெளதம னாரின் வேண்டுகோளின் படி, பல்யானைச் செல்கெழு குட்டு வன் வேள்விகள் செய்து, அவரை மேலுலகிற்கு அனுப்பினான் என்னும் செய்தியை, அம் மன்னனின் அண்ணன் மகனாகிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்-வஞ்சிக்காண்டம் நடுகற் காதையில், 'நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்' (137-38) என்னும் பகுதியில் அறிவித்துள்ளார். இந் நிகழ்ச்சி இளங் கோவடிகள் அறிந்ததா யிருக்க வேண்டும். மன்னன் தொடர்ந்து