பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 தமிழ்நூல் தொகுப்புக் கலை எரியெள்ளு வன்ன நிறத்தன், விரியிணர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன்' என்று தொடங்கும் பாடலும், பாரதம் பாடிய பெருந்தேவனா ருடையதாகவே இருக்கக்கூடும் என்பது புரியாமற் போகாது. - பதிற்றுப் பத்தின் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ஒரு தடை எழுப்பப் பட்டுள்ளது. பதிற்றுப் பத்து உட் பட இதுவரை பேசப்பட்டு வந்துள்ள ஆறு தொகை நூல்களும் ஆசிரியப் பாவால் ஆனவை; முதல் ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துக்களும் பெருந்தேவனாரால் ஆசிரியப் பாவாலேயே இயற்றப்பட்டுள்ளன. ஆனால், பதிற்றுப் பத்துக் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் எரியெள்ளு வன்ன நிறத்தன்' என் னும் பாடல், வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்த மருட்பா வாகும். எனவே, ஆசிரியப்பாவால் ஆன பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தும் ஆசிரியப் பாவாகத்தானே இருக்க வேண் டும்? அங்ங்னமன்றி மருட்பாவாக இருத்தலின், இது பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கமுடியாது; அதேபோல, மற்ற கடவுள் வாழ்த்துக்களை ஆசிரியப்பாவால் இயற்றியுள்ள பெருந்தேவனாரின் பாடலாகவும் இஃது இருக்க முடியாது - இப்படியாக ஒருதடை எழுப்பப்பட்டுள்ளது.மற்றும், வேறொரு வரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல், கலித்தொகைப் பாடல்கள் போலவே கலிப்பாவாக இருப்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது, இந்தத் தடைக்கு வேண்டுமே விடை! ஆசிரியப் பாவால் ஆன ஒரு நூலுக்கு, வெண்பாவும் ஆசிரியமும் கலந்த மருட்பாவால் கடவுள் வ்ாழ்த்து அமைப் பதில் அப்படியொன்றும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. இதில் ஒரளவு ஆசிரியமும் கலந்திருப்பதால்- பிற்பகுதி ஆசிரி யப்பாவால் முடிந்திருப்பதால், இதனைப் பொருத்தப்பாடு டைய தென்றே அமைதி செய்துகொள்ளலாம், அன்றியும் , ஆசிரியமாகவே எல்லாப் பாடல்களும் இல்லாமல், மருட்பா வும் கலந்து மாறுதல் பெற்றிருப்பது ஒருவகைச் சுவையின்பம் அல்லவா? மாறுதலை விரும்புவது மக்கள் இயல்புதானே! பார தம் பாடிய பெருந்தேவனார்க்கு வெண்பாப் பாடுதலும்