பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 317 கைவந்த கலையாகும் என்பதும் சண்டு நினைவுகூரத் தக்கது. எனவே, மருட்பா என்னும் கரடியை விட்டு மறுக்க வேண்டிய தில்லை. தெரியாத ஒன்றைப் பற்றித் திட்டவட்டமாக முடிவு கூறுதல் அரிதெனினும், இதனை ஆராய்ந்து காண்க. இல்லாத பத்துக்கள்: பதிற்றுப் பத்தில் முதல் பத்தும் பத்தாம் பத்தும் ஆகிய இருபது பத்துக்களைச் சேர்ந்த இருபது பாடல்களும் இல்லை யென்பது அறிந்த செய்தி. பதிற்றுப் பத்து ஒலைச் சுவடி களில் இந்த இருபதும் இல்லையாயினும், இவற்றுள் ஐந்து பாடல்கள் மட்டும், புறத்திரட்டாலும் தொல்காப்பிய உரை களாலும் சிந்தாமணி உரையாலும் அறியப்படுகின்றன. இவ்வைந்தனுள் மூன்று பாடல்கள் முழுமையாகக் கிடைத் துள்ளன; ஒரு பாடலில் இறுதி மூன்று அடிகள் மட்டும் அகப்பட்டுள்ளன; மற்றொரு பாடலின், முதற்குறிப்பு' மட்டும் அறியப்பட்டுள்ளது. இவை பற்றிய விவரம் வருமாறு: புறத்திரட்டு என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு மேல் தொகுக்கப்பட்ட தொகை நூலாகும். இதில், பலநூல்களிலுள்ள சிற்சில பாடல்கள் நூற் பெயர்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பதிற்றுப் பத்திலிருந்து ஆறு பாடல் கள் பதிற்றுப் பத்து என்னும் நூற்பெயருடன் புறத்திரட்டில் தொகுக்கப் பட்டுள்ளன. இந்த ஆறனுள், புறத்திரட்டுச் செய்யுள் வரிசைப்படி 845,1267,1283,1505 என்னும்நான்கு எண் கள், நான்கு பாடல்கள், பதிற்றுப் பத்தில் இப்போது கிடைத் துள்ள எண்பது பாடல்களுள் உள்ளன. இந்த நான்கும்பதிற்றுப் பத்துப் பாடல் வரிசைப்படி முறையே 28 (845), 83 (1267), 29 (1283), 63 (1505) என்னும் எண் கொண்டவையாகும். ஆறனுள் மற்ற இரு பாடலும் இப்போது கிடைத்துள்ள எண்பது பாடல்களுள் இல்லை; எனவே இவையிரண்டும் பதிற்றுப் பத்தின் முதல் பத்தையோ பத்தாம் பத்தையோ சேர்ந்தன வாயிருத்தல் வேண்டும். இவை புறத்திரட்டில் 1260, 1275 எண்கள் கொண்டனவாகும். இவற்றுள் 1260 - ஆம் எண் கொண்ட பாடல் வருமாறு: