பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.18 தமிழ்நூல் தொகுப்புக் கலை 'இருங்கண் யானையொ டருங்கலங் தெறுத்துப் பணிந்துகுறை மொழிவ தல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே யுருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்க் தாங்குக் கண்ணதிர்பு முழங்கும் கடுங்குரல் முரசமொடு கால்கிளர்ந் தன்ன ஊர்தி கான்முளை எரிகிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து களியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி நீர்துனைந் தன்ன செலவின் கிலத்திரைப் பன்ன தானையோய் கினக்கே.' இந்தப் பாடல் நூற்பெயருடன் புறத்திரட்டில் கிடைத் திருப்ப தன்றி, தொல்காப்பியம் - புறத்திணையியலில் இயங்கு படை யரவம் என்று தொடங்கும் (7-ஆம்) நூற்பாவின் உரையிடையே, வயங்கல் எய்திய பெருமை'என்னும் துறைக்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணராலும் தரப்ப்ட்டுள்ளது; ஆனால், இளம்பூரணர் நூற்பெயர் குறிப்பிடாமல் பாடலை மட்டும் முழுதும் தந்துள்ளார். இதே நூற்பாவின் உரை யிடையே, வென்றோர் விளக்கம்' என்னும் துறைக்கு எடுத்துக் காட்டாக, இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளை மட்டும், பதிற்றுப்பத்து என்னும் நூற்பெயருடன் நச்சினார்க்கினியர் கொடுத்துள்ளார். மற்றும், சீவக சிந்தாமணி-நாமகள் இலம் பகத்தில் உள்ள உருவ மாமதி' என்று தொடங்கும் (310) செய்யுளின் உரையிடையே, முன்பு நிறைமதி போலும் முகத் தில் ஒளி, இப்பொழுது வருத்தத் தாற் கெட்ட கரிய வொளி; 'இருங் கண் யானை போல...'- என இந்தப் பதிற்றுப் பத்துப் பாடலின் முற்பகுதியை நச்சினார்க்கினியர் எடுத்தாண்டிருப் பதும் காண்க. எனவே, இருங்கண் யானையொடு' என்று தொடங்கும் பாடல், பதிற்றுப் பத்தில் இல்லாத இருபது பாடல்களுள் ஒன்று என்பது விளங்கும். அடுத்து, புறத்திரட் டில் 1275-ஆம் எண் கொண்டுள்ள பதிற்றுப் பத்துப் பாடல் வருமாறு: 'வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமாத் தேரொடு சுரந்து