பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப் பத்து 321 பாடல் ஒன்றின் இறுதி அடிகள் என்பது புலனாகும். இந்த மூன்று அடிகளும், இப்போதுள்ள எண்பது பாடல்களுள் எதி லும் இல்லாமையால், பதிற்றுப் பத்தின் முதல் பத்து அல்லது பத்தாம் பத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு பாடலின் இறுதிப் பகுதி என்பது தெளிவு. நச்சினார்க்கினியர் இந்தப் பாடல் முழுவதையும் கொடாதது நமது தீப்பேறே. மற்றும், - தொல்காப்பியப் புறத்திணையியலில் 'அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று தொடங்கும் (20-ஆம்) நூற்பாவின் உரையிடையே, "விசையந் தப்பிய என்னும் பதிற்றுப்பத்து சகை கூறிற்று' - என நச்சினார்க்கினியர், பதிற்றுப் பத்துப் பாடலொன் றைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பாடலும் எண்பது பாடல்களுள் இல்லை. எனவே, இஃதும், முதல் அல்லது பத் தாம் பத்தைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும். நச்சினார்க் கினியர் இந்தப் பாடலை முதற்குறிப்போடு விட்டு விட்டது நமக்குப் பேரிழப்பாகும். புதையலெனக் கிடைந்த ஐந்து பாடல்களுள், விசையந் தப்பிய என்னும் பாடல் அந்த முதற்குறிப்போடு மட்டும் நின்று விட்டதாதலின், அதனை விடுத்து, மற்ற நான்கு பாடல் களுள் முதல் பத்திற்கு உரியவை எவை-பத்தாம் பத்திற்கு உரியவை எவை-என ஒரு சிறிது காண்பாம்: முதல் பத்து உதியஞ் சேரலைப் பற்றியது என முன்பு நாம் முடிவு கட்டியுள்ளோம். உதியஞ்சேரலின் மகன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்; அவன் மகன் சேரன் செங்குட்டு வன். எனவே, சேரன் செங்குட்டுவனின் பாட்டனும் இமய வரம்பனின் தந்தையுமாவான் உதியஞ் சேரல் என்பது பெற் றாம். இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்று வந்த வர்கள் என்பது சிலப்பதிகாரம் முதலியவற்றால் அறியப்பட்ட வரலாறு. எனவே, இவர்தம் முன்னோனாகிய உதியஞ் சேர லும் வடக்கே நெடுந்தொலைவு படையெடுத்துச் சென்று வென்றுவந்தவன் என்ற வரலாறு அறியப்படும். உதியஞ்சேரல்