பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


322 தமிழ் நூல் தொகுப்புக் கலை வடக்கே படையெடுத்துச் சென்றதன் தொடர்ச்சியாகவே அவன் மகனும் பேரனும் சென்று வந்திருக்கிறார்கள். 'தென் னகத்தார் வடநாட்டுக்குப் படையெடுத்து வந்தபோது எம் போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும்”-என்று வடநாட்டு முன்னர்களாகிய கனக விசயர் கதைத்ததைப் பொறுக்காமல் செங்குட்டுவன் அவர்கள் மேல் படையெடுத்துச் சென்றான் என்று வரலாறு கூறுகிறதென்றால், அவனுக்கு முன்பே பாட்டன்மார் படையெடுத்துச் சென்ற வரலாறு அறிந்த தொன்றே. இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், - புறத்திரட்டா லும் தொல்காப்பிய உரைகளாலும் அறியப்பட்டுள்ள பதிற்றுப் பத்துப் பாடல்கள் நான்கனுள். இருங்கண் யானையெர்டு' என்று தொடங்கும் பாடலிலும், இலங்கு தொடி மருப்பின் - என்று தொடங்கும் பாடலிலும், மன்னனது வெளிநாட்டுப் பயணச்செலவு குறிப்பிடப் பட்டிருத்தலினாலும், முதல்பாடல் புறத் திரட்டில் பகை வயிற்சேறல்’ என்னும் தலைப்பின்கீழ்க் கொடுக்கப்பட்டிருத்தலினாலும், இரண்டாவது பாடல் முன்ன தற்கு இளைத்த தாய்த் தெரியவில்லை யாதவினாலும், இவ்விரு பாடல்களையும், உதியஞ்சேரலுக்கு உரியதாகக் கரு தப்படும் முதல்பத்தைச் சேர்ந்தவை எனக் கூறலாம். அடுத்து.--பத் தாம் பத்து, யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பற்றிக் கூடலூர் கிழாரால் பாடப் பட்டிருக்கலாம் என முன்பு கூறப்பட்டுள்ளது. புறத்திரட்டால் அறியப் பெற்றுள்ள, வந்தனென் பெரும கண்டெனென் செயற்கே...கடாஅ யானை முழங்கும் இடாஅ வேணி நின் பாசறை யோனே' என்னும் பாடலில், புலவர் அரசனைக் கண்டு வருவதற்காகப் பாசறைப் பக்கம் சென்ற செய்தி கூறப் பட்டிருத்தலானும், பாடலிடையே நன்கலன் ஈயும் நகைசால் - இருக்கை என அரசனது ஈகை சிறப்பிக்கப் பெற்றிருத்தலா னும், இந்தச் செய்தி யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையைக் கூடலூர் கிழார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலோடு ஒத்து வராததால், இந்தப் பாடலைப் பத்தாம் பத்துக்கு உரிய பாடலாகக் கருதலாம். குதிரையைக் குறிக்கும் "கலிம்ா என்னும் பெயர், இந்தப் பதிற்றுப் பத்துப் பாடலிலும்,