பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 323 கூடலூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலிலும் வந்திருப்பது ஈண்டு எண்ணத் தக்கது. - - இறுதியாக,-பதிற்றுப் பத்துப் பாடல் ஒன்றின் பிற்பகுதி யாகிய பேணு தகு சிறப்பின் என்று தொடங்கும் மூன்று அடிகளைக் காண்பாம்: இந்தப் பகுதியில், பெண்களைப் பற்றிய அந்தப்புரத்துச் செய்தி கூறப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியரும், தலைவி கூறுவதற்கு எடுத்துக் காட்டாகவே இந்தப் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். மன்னனுக்கு ஒருத்திக்குமேல் துணைவியர் இன்னும் சிலர் உளர் என்னும் சூழ்நிலையில் பின்னப்பட்டு இப்பாடற் பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. இந்தப் பகுதி யானைக்கட்சேயைக் கூடலூர்கிழார்பாடியுள்ள புறநானூற்றுப் பாடலிலுள்ள, 'ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணை யாகித் தன்துணை யாயம் மறந்தனன் கொல்லோ என்னும் பகுதியோடு ஒத்து வருகின்றதல்லவா? எனவே, இந்தப் பதிற்றுப்பத்துப் பாடற்பகுதி, யானைக்கட் சேயைக் கூடலூர் கிழார் பாடியதாகக் கருதப்படும் பத்தாம் பத்தின் ஒரு பாடலைச் சேர்ந்ததாயிருக்கலாம் எனக் கருதலாம். இனம் தெரியாத பதிற்றுப் பத்துப் பாடல்கள் நான்கும், முதல் பத்துக்கும் பத்தாம் பத்துக்கும் இங்கே பங்கிடப் பெற்' றுள்ளன. இந்த உய்த்துணர்வு தவறாகவும் இருக்கலாம்-சரி யாகவும் இருக்கலாம். கிடைக்காத் இரு பத்துக்களும் கிடைக் குங்கால் உண்மை விளங்கும். மறைந்த மாயம் பதிற்றுப் பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் மறைந்த மாயம் எப்படியோ! இதில் மாயம் ஒன்றும் இல்லை. ஒரு நூர்வின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிழிந்து அழிந்து போவது இயல்பே. இந்தக் காலத்திலும் - சிறுவர்கள் என் றென்ன - பெரியவர்கள் வைத்துப் பயன்படுத்தும் அச்சு நூல் களும் முன்னும் பின்னும் கிழிந்து சிதைந்து போவதைக் காண் கின்றோம். இவ்வாறே, பதிற்றுப் பத்தின் முதலும் கடையும் அழிந்துபோயின. - i பதிற்றுப் பத்தின் நூறு பாடல்களுள் முதல் இரண்டு மூன்று பாடல்களும் இறுதி யிரண்டு மூன்று பாடல்களும்