பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/348

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


324 தமிழ் நூல் தொகுப்புக் கலை சிதைந்து போயிருப்பின் இயற்கை யெனலாம்; ஆனால், சொல்லிவைத்தார் போல் ஒன்றுகூட நில்லாமல் முதலில் சரி யாய்ப் பத்துப் பாடல்களும் இறுதியில் சரியாய்ப் பத்துப் பாடல்களும் இல்லாதுபோனது எவ்வாறு? இதிலும் வியப் பொன்றும் இல்லை. இந்த நிலைமையிலிருந்து நமக்கு விளங்கு வதாவது:- - பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் உரிய ஒலைச் சுவடிகள் தனித்தனிப் பத்தாகக் கட்டுக் கட்டி முறையே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,-முதலும் கடை யும் சிதைவது இயற்கை என்ற பொது முறைப்படி, முதல் கட்டும் இறுதிக் கட்டும் சிதைந்து போயின. சரி,-கட்டாக இருந்தது எவ்வாறு காணாமற் போயிற்று? யாராவது திருடிக் கொண்டிருககலா மெனில், முதலையும் கடையையும் மட்டும் திருடுவானேன்? செல்லரித்திருக்கலா மெனில், முதல் கட்டிலும் இறுதிக்கட்டிலும் ஓர் ஒலையைக் கூட மீதி வைக்கவில்லையா? அவ்வாறே நடந்திருப்பினும், எல்லாருடைய வீட்டு ஒலைச் சுவடிகளிலுமா இவ்வாறு நடந் திருக்கக்கூடும்? சிலர் வீட்டில் இப்படி நடந்திருப்பினும், வேறு சிலர் வீட்டிலாயினும் முழுதும் இருந்திருக்கக் கூடுமே! அப்படியே எல்லாருடைய வீட்டிலும் செல்லரித்திருப்பினும், சிலர் வீட்டில் முன்பகுதியில் மட்டும் அரித்திருக்க வேண்டும்-வேறு சிலர் வீட்டில் பின் பகுதியில் மட்டும் அரிந்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறே எல்லாருடைய வீட்டிலும் இருபுறங்களிலும் அரித் திருப்பினும், சிலர் வீட்டில் முன்பகுதியிலாவது சில பாடல் களும், சிலர் வீட்டில் பின் பகுதியிலாவது சில பாடல்களும், விட்டு வைக்கப்பட்டிருக்கலாமே! எல்லாருடைய சுவடிகளிலும் முதல் பத்து முழுதும், இறுதிப் பத்து முழுதும் தொலைந்து போனது எவ்வாறு? அதிலும், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதி களிலும் இந்த நிலைமை ஏற்பட்டது எவ்வாறு? 1904 - ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிற்றுப் பத்தைப் பதிப்பித்த தமிழ் ஐயா உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தமது ஆராய்ச்சிக்குக் கிடைத்த பதிற்றுப்பத்தின் ஆறு ஒலைச் சுவடிப்