பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப் பத்து 325 படிகளைப் பற்றி தமது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். அவை ஆறும் வருமாறு: 1. திருவாவடுதுறை ஆதீனத்துப் பிரதி. 2. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தக சாலைப் பிரதி. 3. ஆழ்வார் திருநகரி, தே. லட்சுமணக் கவிராயர் வீட்டுப் பிரதி. - 4. ஜே.எம். வேலுப்பிள்ளையவர்கள் பிரதி. தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் பிரதி. , திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் பிரதி. உ.வே.சா. அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த ஆறு படி (பிரதி) களிலும் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இல்லையாம்: இவை ஆறும் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவை. வேலுப் பிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கனகசுந்தரம்பிள்ளை இலங்கை-யாழ்ப்பாணத்தார். இவ்வாறு பலரிடமும் இருந்த படிகளுள் ஒன்றிலாயினும் இரண்டு பத்துக்களும் இருக்கக் கூடாதா? ஒரு பத்தாயினும் ஒரு பத்தில் சில பாடல்களாயினும் இருக்கக் கூடாதா? இந்த ஆறுபடிகளே யன்றி, இன்னும் சில படிகள் தமக்குக் கிடைத்ததாக உ.வே.சா. கூறியுள்ளார். எதிலுமே இரண்டும் இல்லை-பழைய உரை இருந்த படிகளிலும் இல்லையாம். . - பழைய உரையுடன் கூடிய படியொன்றில் ஒன்பதாம் பத்தின் இறுதியில், பதிற்றுப் பத்து மூலமும் உரையும். முடிந் தது; சுப மஸ்து”-என்று எழுதப்பட்டிருந்ததாக உயர் திரு ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தெரிவித்துள்ளார் கள். - புறத்திரட்டு தொகுக்கப்பட்ட காலத்திலும், பதினான் காம் நூற்றாண்டினராகிய நச்சினார்க்கினியர் காலத்திலும், முழு உருவத்தில் இருந்த பதிற்றுப் பத்திலிருந்து இரு பத்துக் கள் பிற்காலத்தில் காணாமற்போனது எவ்வாறு? இதற்குத் தக்க விடை கூற முடியும். பழைய தமிழ் நூல்களுள் இப்பொழுது கிடைத்திருப்பன