பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - . தமிழ் நூல் தொகுப்புக் கலை ஆணியடித்துக் கொண்டு அசைக்க முடியாமல் நிலைத்து விட்டது. இதில் ஒரு புதுமை என்னவென்றால்,-,செய்யுள் வேறு-'கவிதை வேறு என்று சொல்லப்படுகிறது. அஃதாவது செய்யுள் என்பது மிளகாய்ப் பொடி போலவும், கவிதை என் பது கற்கண்டு போலவும் ஒருசிலரால் கருதப்படுகிறது. "செய்யுள் என்பது செய்யப்படுவது-கட்டப்படுவது. அதில் அவ்வளவாக உணர்ச்சியோ சுவையேர் இராது. அறிவுரை, மெய்யுணர்வு (தத்துவம்) முதலிய எல்லாப் பொருள்கள்ையுமே எதுகை மோனையுட்ன்-சீர் தளைப்பொருத்தத்துடன் கூறும் ஒரு வகைச் சொற் குவியலே செய்யுள்' என்பது சிலரது கருத்து. இவர்கள் கவிதை' என்பதற்குக் கூறும் விளக்கமோ மிகுந்த பெருமைக்கு உரியது. கவிதை என்பது,படிப்பவரின் உள்ளுணர்ச் சியைத் தூண்டி, மனவெழுச்சியைக் கிளறி, கற்பனையுலகில் சிறகடித்துப் பறக்கச்செய்து, தம்மை மறந்து மதுவுண்டவர் போல் ஒருவகை மயக்கத்தில் ஆழச் செய்வது'-என்பது இவர் கள் கூற்று. - - இவர்கள் கருதுவது போல் செய்யுள் வேறு-கவிதைவேறு என்று சொல்லிவிட முடியாது. இன்று கவிதைக்கு இவர்கள் என்ன இலக்கணம் கூறுகின்றார்களோ, அந்த இலக்கணம் அன்று செய்யுளில் இயற்கையாய் அமைந்திருந்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் தொல்காப்பியர் செய்யுள் இயல் எனப் பெயரிட்டு இலக்கணம் கூறியுள்ளபடி இயற்றப்பட்ட செய்யுட் களில், இன்று பெரிதுபடுத்திப் பேசப்படும் கவிதை என்ப தற்கு உரியனவாகக் கூறப்படும் சிறப்புக்கள் எல்லாம் அமைந் திருந்தன. பா, பாட்டு எனப்படுவனவற்றிற்கும் இந்தச் சிறப் புக்கள் எல்லாம் உண்டு. ஆனால், செய்யுள், பா, பாட்டு என்னும் பெயர்களில் ஒருசிலரால் இயற்றப்பட்ட உருப்படிகளில் உணர்ச்சியோ, சுவையோ இல்லாது போனமையாலும், நாளடைவில் கணிதம், மருத்துவம், வானநூல், மெய்யுணர்வு, நிகண்டு முதலிய யாவும் செய்யுள்வடிவில் இயற்றப்பட்டுக் கற்பனை நயம் இல்லாது