பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 தமிழ் நூல் தொகுப்புக் கலை எனப் பதிகத்தில் எழுதிவிட்டிருக்க வேண்டும். அல்லது, இன் னொரு விதமாகவும் இருக்கலாம். ஒரு புலவர், ஒரு மன்னன் மேல் பத்து' என்னும் பெயரில் பத்துப் பாடல்கள் பாடும் மரபு அந்தக் காலத்தில் இருந்திருக் கலாம். அந்த மரபின் படியும் இந்தப் பத்துப் பத்துக்களும் பாடப் பட்டிருக்கலாம். எனவே, இப்பத்துக்கள் சொல்லி வைத்துச் செயற்கையாய்ப் பாடப்பட்டன அல்ல, இயற்கையாய் பாடப்பட்ட பத்துக்கள் எனக் கொள்ளலாம். இயற்கையாய்ப் பாடப்பட்டன வெனினும், பத்துப் பத்துக்கள் மட்டுமே பாடப் பட்டிருக்கமாட்டா: பத்துக்குமேல் எண்ணிறந்த பத்துக்கள் பாடப்பட்டிருந்திருக்கும் அஃதாவது மன்னர்கள் பலரைப்பற் றிப் புலவர்கள் பலர் பத்து' என்னும் பெயரில் பத்துப் பாடல் கள் கொண்ட பல பத்துக்கள் பாடியிருக்கலாம். அந்தப்பத்துக் கள் பல வற்றிலிருந்து சிறந்த பத்துப் பத்துக்களைத் தேர்ந் தெடுத்து இத்தப் பதிற்றுப் பத்து நூலாகத் தொகுத்திருக்கலாம். 'பத்து என்னும் பெயரில் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துக்கள் பல ஐங்குறு நூற்றில் இருப்பதும் ஈண்டு ஒப்பு நோக் கற்பாற்று. எனவே, பத்து பாடும் மரபு பழங்காலத் திலேயே இருந்தது என்பது தெளிவு. இதுகாறும், பதிற்றுப் பத்துத் தொகுப்புமுறையைப் பல கோணங்களில் நின்று பார்த்தோம். இறுதியாக, - 'பத்து' என் னும் பெயரில் பத்துப் பாடல்கள் வீதம் பாடப் பட்டிருந்த பத்துக்கள் பலவற்றிலிருந்து சிறந்த பத்துப் பத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து உருவாக்கியதே பதிற்றுப்பத்து - என்ற முடிவுக்கு வரலாம், அடுத்து, நூல் தொகுத்தவரின் சிறந்த வேலைப்பாடு ஒன்றினை இவண் குறிப்பிட வேண்டும். பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் துறையும் வண்ணமும் தூக்கும் பெயரும் கொடுத்திருப்பதுதான் அந்த வேலைப்பாடு. ஒவ் வொரு பாடலையும் படித்துப் பார்த்து, பொருள் பொதிந்து சிறந்துநிற்கும் ஒரு தொடரை அந்தப் பாடலில் இருந்து தேர்ந்தெடுத்து அந்தப் பாடலுக்குப் பெயராகத் தந்துள்ளார். துறை, வண்ணம், தூக்கு ஆகியவற்றைத் தொல்காப்பியத்தை