பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/355

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப்பத்து 331 ஒட்டித் தந்துள்ளார்.ஆனால், துறைக்கு முன் திணை கொடுக் கப் படவில்லை. எல்லாப் பாடல்களுமே பாடாண்திணை என முன்பு சான்றுடன் கூறியுள்ளோம். எல்லாமே பாடாண்திணை யாய் இருப்பதால் திணை கூறப்படவில்லை என்று சொல்ல முடியாது. முதல் பத்தின் தொடக்கத்தில், முதல் பாட்டின், திணை பாடாண் திணை எனக் கூறிப் பின்வரும் பாடல்கள் யாவும் அதே திணை என்று குறிப்பிட்டிருப்பார். நூலின் முற் பகுதி கிடைக்காமற் போனதால், அந்த விவரமும் கிடைக் காமற் போயிற்று. மற்ற அகத்திணைத் தொகை நூல்களுக்கும் புறநானூற்றிற்கும் திணையும் துறையும் கூறப்பட்டிருப்பது போலவே, பதிற்றுப் பத்துக்கும் திணையும் துறையும் கூறிய தல்லாமல், அந்தத் தொகை நூல்களில் கூறப்படாத வண்ண மும் தூக்கும் கூடுதலாகக் கூறியிருப்பது, பதிற்றுப் பத்துத் தொகுப்பாளரின் வேலைப்பாடு மிகுந்த தொகுப்புக் கலைத் திறனுக்குச் சிறந்த சான்றாகும். தொகுப்பின் பயன்: பதிற்றுப் பத்து நூல் தொகுத்து உருவாக்கியதனால் பெறப்பட்ட பயன்களாகப் பல கூறமுடியும். இந்நூல் அமைப் பைப் பார்த்துப் பத்து, பதிகம், பதிற்றத்தாதி, ஒருபா ஒரு பஃது, பதிற்றுப்பத் தந்தாதி போன்ற பெயர்களில், பிற்காலத் தில் பல நூல்கள் தோன்றிய பயன் ஒருபுறம் இருக்க. - தமிழர்களின் வீரம், கொடை, புலமைத் திறமை, இலக் கியச் சுவையின்பம், பண்பு, வாழ்வு முறை முதலியவற்றின் சிறப்பு அறியப்பட்ட பயன் மறறொரு புறம் இருக்க, முடியுடை மூவேந்தர்களுள் ஒருவகையினராகிய சேர மன்னர்களின் வரலாற்றினை ஒரளவு கருக்கமாகவாவது தொகுத்து அறிவதற்கு இந்தத் தொகுப்புப் பெருந்துணை புரியும் பயனை மறக்க முடியாது. பண்டை நாளில் தமிழில் முறையாக வரலாறு எழுதப்படாத குறையை இத்தகைய தொகுப்புக்களே ஒரளவு ஈடு செய்கின்றன. எனவே, தமிழக வரலாற்றுத் துறையில் புறநானூற்றைப் போலவே பதிற்றுப் பத்துக்கும் தக்க பங்கு உண்டு என்பது வெளிப்படை.