பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகையும் பரிபாடலும் 333 'இனி நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தார் தொகுத்தவற்றுள் ஒன்றனை யில்லை யென்றார்...' என்னும் உரைப் பகுதியும், மற்றும் செய்யுளியலில், ஒத் தாழிசைக் கலி' என்னும் (130 - ஆம்) நூற்பாவின் கீழ், ".. நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசை அறுபத்தெட்டுவந்தன வாகலின். அது பெருவரவின எனப்பட்டுச் சிறப்புடைத் தாயிற்று...' எனவும், அவற்றுள் ஒத்தாழிசைக்கலி இரு வகைத்தாகும் என்னும் (131 - ஆம்) நூற்பாவின் கீழ், "... அற்றன்று, நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலியின் அராக உறுப்பும் அம்போதரங்க உறுப்பும் பெற்றுவருவன இன்மையின் அவை பொருளன்றென்பது...' எனவும், ஒரு பொருள் நுதலிய என்னும் (153 - ஆம்) நூற் பாவின் கீழ் "நூற்றைம்பது கலியுள்ளும், கலிவெண்பாட்டு எட்டாகலின் அவற்றுள் ஒரு பொருள் நுதலி வருவன பிறவும் உள ... வும், தரவும் போக்கும்’ என்னும் (154 - ஆம்) நூற்பாவின்கீழ், "...நூற்றைம்பது கலியுள்ளும் அன்னதோர் கலிவெண்பாட்டின் மையின் அது சான்றோர் செய்யுளோடு மாறுகோளா மென

  • * 石了@T

மறுக்க...”எனவும், பாநிலை வகையே' என்னும் (155-ஆம்) நூற்பாவின் கீழ், "...இது நூற்றைம்பது கலியுள் ஒன்றா கலின் வெண்பா வாகியும் தனித்து வரும்..” எனவும், கலி வெண்பாட்டே' என்று தொடங்கும் (செய்யுளியல் - 160ஆம் நூற்பாவின் கீழ், "...நூற்றைம்பது கலியுள்ளும் கைக்கிளை பற்றி இவ்வாறு வரும் கலிவெண்பாட்டுக் காணாமாயினமை யிற் காட்டாமாயினாம். நூற்றைம்பது கலியுள்ளும் இவை கோப்புண்டன. வென்பது நினையாதாரும் இவற்றுள் ஒரு பொருள் முதலிய ஒழிந்தனவெல்லாம் வெண்பாவென்று அடி வரை கூறாதொழிய..."- எனவும், பேராசிரியர்வரைந்துள்ள உரைப் பகுதிகளும் காண்க. மற்றும், தொல்காப்பியம் - செய்யுளியலில் ஒத்தாழிசைக் கலி' என்னும் (130 - ஆம்) நூற்பாவின்கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள. "...நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலி அறுபத் தெட்டு வந்தது...” - என்னும் உரைப்பகுதியிலும், ஒரு பொருள் நுதலிய என் னும் (செய் - 153 ஆம்) நூற்பாவின் கீழ் அவர் வரைந்துள்ள