பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/358

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


334 தமிழ் நூல் தொகுப்புக் கலை "நூற்றைம்பது கலியுள் கலிவெண்பாட்டு எட்டு; அவற் றுள் ஒரு பொருள் நுதலி வருவனவற்றின் பொருள் வல்லார் வாய்க் கேட்டுணர்க...” என்னும் உரைப் பகுதியிலும், தரவும் போக்கும் என்னும் (செய் - 154 ஆம்) நூற்பாவின்கீழ் அவர் வரைந்துள்ள, "நூற்றைம்பது கலியுள் அவ்வாறு வருவன இன்மையின் அது சான்றோர் செய்யுளொடு மாறு கொள்ளுமென மறுக்க" என்னும் உரைப் பகுதியிலும், கலித்தொகை நூற்றைம் பது கலி' எனக் குறிப்பிடப் பட்டிருப்பது காண்க. கலி என்னும் பெயர்: மேலே காட்டப்பட்டுள்ள பேராசிரியர் உரைப்பகுதிகளி லும் நச்சினார்க்கினியர் உரைப் பகுதியிலும் கலித்தொகை கலி' என்னும் பெயரால் சுட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இவர்கள் இன்னும் வேறிடங்களிலும் கலி' என்னும் பெய ரால் குறிப்பிட்டுள்ளனர். ஒத்தாழிசைக் கலி' என்னும் (செய்130 - ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் வரைந்துள்ள, "...கலியும் பரிபாடலும் என எட்டுத் தொகையுள் இரண்டு தொகை தம்மின் வேறாதலின் அவ்வாறு கூறுவர் செய்யுள் அறியாதார் என்பது...' - என்னும் உரைப் பகுதியிலும், ஆசிரியப் பாட்டின் என் னும் (செய் - 157 - ஆம்) நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, - “...பரிபாடலும் கலியும் ஒழிந்த தொகையாறும் இடை யளவிற்கு எல்லை...' - என்னும் உரைப்பகுதியிலும், கவி என்னும் பெயரால் கலித்தொகை குறிப்பிடப் பட்டிருப்பது காண்க. கலிப்பா என்னும் பெயர்: கலித்தொகை கவிப்பா' என்னும் பெயராலும் சுட்டப்பட் டுள்ளது. இதனை, 'வெண்பா வியலினும் பண்புற முடியும்’ என்னும் செய்யுளியல் (76-ஆம் நூற்பாவின்கீழ்ப் பேராசிரியர்,