பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூல் தொகுப்புக் கலை 11 போயினமையாலும், செய்யுள் வேறு கவிதை வேறு என்று கருதக்கூடிய சூழ்நிலை பிற்காலத்தில் உருவாகி விட்டது. இத்தகைய மாறுதல் எந்தத் துறையிலும் நிகழக் கூடியது தான்! இதைக்கொண்டு, கவிதை எனப்படுவதில் உள்ள உணர்ச்சி, சுவை, கற்பனைநயம் முதலிய சிறப்புக் கூறுகள், செய்யுள் எனப்படுவதில் இல்லை எனச் சொல்லிவிடமுடியாது. - செய்யுள், பா, பாட்டு, பாடல் ஆகியவற்றுக்குள் காலப் போக்கில் சிறுசிறு வேறுபாடு கூறமுடியுமென்றாலும், பெரும் பாலும் இவையனைத்தும் ஒத்த பொருள் உடையனவே. அஃதாவது, இவற்றுக்குள் நெருங்கிய தொடர்பு உண்டு. மற்றும், கவிதை எனப்படுவதற்கு உரிய சிறப்புக்கள் எல்லாம் இவற்றிற்கும் உண்டு. - போனது போகட்டும் பிள்ளையாரே வழி என்றாம் போல, போனது போக! இனி, இன்றைச் சூழ்நிலைக்கு வருவோம். வடமொழி வழிவந்த கவிதை' என்னும் சொல் லுக்குப்பதிலாக, இனி நாம் பாடல்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். இன்று, 'பாரதியார் கவிதைகள், பாரதி தாசன் கவிதைகள் என்றெல்லாம் சொல்லப்படுவதை நாம் அறிந்துள்ளோம். இதற்குப் பதிலாக, பாரதியார் பாடல்கள்’, 'பாரதிதாசன் பாடல்கள்’ என்று ஏன் சொல்லக் கூடாது? இது புயதிமுறையன்று; பழைய முறையே. இதனை நம் முன்னோர் களே நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக, "தாயுமானார் பாடல்', 'பட்டினத்தார் பாடல்’, ‘சிவவாக்கியர் பாடல்”, “குதம்பைச் சித்தர் பாடல் முதலிய பெயர்களைக் காண்க. இவர்தம் பாடல்கள், உணர்ச்சி, கிளர்ச்சி, எழுச்சி, புரட்சி, கற்பனை முதலிய வற்றில், பாரதியார்-பாரதிதாசன் முதலியோரின் பாடல்களுக்கு எந்தவகையிலும் குறைந்தவை யல்ல. சொல்லப் போனால், அவரவர் வாழ்ந்த கால்ச் சூழ் நிலைகட்கு ஏற்பச் சிறுசிறு மறுதல்கள் இருக்கலாம்; அவ்வளவு தான. இதுகாறும் மாதிரிக்காக, நாம் நன்கு அறிந்த தமிழ்ப் பாடல்களைப் பற்றிப் பேசினோம். இதுபோலவே, எல்லா