பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 தமிழ் நூல் தொகுப்புக் கலை (2) சில கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாயுள்ளன. (3) பாடல்கள் மொழி நடையில் வேறுபட்டுள்ளன. (4) உயர்வற்ற எளிய செய்திகள் சில இடம் பெற்றுள்ளன. (5) வடவர் செய்திகள்-ஆரியக் கொள்கைகள் ஒருசில உள்ளன. எனவே, பழங்காலத்து உயர்ந்த புலவர் முதல் பிற்காலத்து எளிய புலவர்வரை பலரால் இயற்றப்பட்ட உதிரிப் பாடல்களின் தொகுப்பே கலித்தொகை - என்று இவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஏதேனும் குறைபாடு எல்லா நூல்கட்கும் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆரியக் கொள்கைகள் தொல் காப்பியத்திலேயே புகுந்துவிட்டன. எனவே, இந்தக் காரணங் களை யெல்லாம் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. கலித்தொகை மற்றத் தொகைநூல்களைப் போலவே ஐவருக் குமேல் பலரால் பாடப்பட்டிருக்குமாயின், மற்றத் தொகை நூலைப்போலவே பலரால் பாடப்பட்டது கலித்தொகை என்று சொல்லியிருப்பார்களே. இந்த ஐவரை மட்டும் குறிப் பிட்டதேன்? அங்ங்னமெனில், நெடுந்தொகையினையும் ஐவர் அல்லது பதின்மரே பாடினர் என்று கூறியிருக்கலாமே பலரை மறைத்து ஐவரை மட்டும் குறிப்பிடுவதால் கிடைக்கும் ஆதாயம் என்ன? ஏதோ தக்க ஆதாரம் இல்லாமல் இந்த ஐவர் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியாது. எனவே, இது குறித்து வீணாகக் குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தொகுப்பு முறை கலித்தொகையை நல்லந்துவனார் தொகுத்தார் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் ஐந்து கலியுள் நெய்தல் கலியையும் பாடியவராவர். இத்னை, நெய்தல் கலியில் இருபத் தைந்தாம் பாடலின் உரையிடையே நச்சினார்க்கினியர் வரைந் துள்ள உரைப் பகுதியாலும் அறியலாம். அதுவருமாறு: "சொல்லொடும் குறிப்போடும் முடிவுகொள் இயற்கை,