பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றைம்பது கலித்தொகை 341 புல்லிய கிளவி யெச்ச மாகும்' என்பதனாற் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்து வனார் செய்யுட் செய்தார்.". - - இந்த உரைப்பகுதியால், நெய்தல் கலியின் ஆசிரியர் நல்லந்துவனார் என்பது நன்கு விளங்கும். நல்லந்துவனார் தாம் பாடிய நெய்தல் கலியை இறுதியில் அமைத்துத் தொகுத்துக் கலித்தொகையை உருவாக்கியுள்ளார். கலித்தொகையில் ஒவ் வொரு திணைக்கும் உரிய பாடல் எண்ணிக்கையை நோக்குங் கால், எப்படியாவது நூற்றைம்பது என்னும் எண்ணிக்கை அமையவேண்டும் என நல்லந்துவனார் திட்டமிட்டுச் செய் திருப்பதாகத் தெரிகிறது. மற்ற நால்வரும் நான்கு திணைகள் பற்றிப் பாடியுள்ள கலிப்பாக்களுள் சிறந்தன. சில வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, மற்ற நால்வரும் இப்பொழுது கவித்தொகையில் உள்ன பாடல்களைமட்டுமே பாடியிருக்கக்கூடும். அல்லது. - மற்ற நால்வரும் இன்னும் மிகுதியாகப் பாடியிருப் பினும். இந்த அளவு பாடல்களே நல்லந்துவனார்க்குக் கிடைத் திருக்கக் கூடும். அந்தப் பாடல்களுக்கு முன்னால் கடவுள் வாழ்த்து ஒன்று பாடிச் சேர்த்திருக்க வேண்டும். இறுதியில், தம் நெய்தல் கலிப் பாடல்களையும் சேர்த்து நூற்றைம்பது என்னும் ஓர் அழகிய எண்ணிக்கை உருவாக்க வேண்டும் என எண்ணியிருப்பார். அதற்காக, முப்பத்து மூன்று நெய்தல்கலிப். பாடல்களைச் சேர்த்து எண்ணிக்கையை ஒழுங்குசெய்து நூலைத் தொகுத்து உருவாக்கி யிருக்கிறார். கலித்தொகை உரையின் முகப்பில், "...ஆதலான் ஈண்டுப் பாலைத் திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார் என்று கூறுக... ...ஆக வின், இத்தொகைக் கண்ணும் அவை மயங்கிவரக் கோத்தார் என்று கூறி விடுக்க...ஐங்குறு நூற்றினும் பிறவற்றினும் வேறுபடக் கோத்தவாறுங் காண்க. என்றும், உரையின் இறுதியில் 'இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்' என்றும் நச்சினார்க்கினியர் எழுதியிருப்பதி லிருந்து, கலித்தொகை முழுவதையும் நல்லந்துவனார் இயற்ற வில்லை - அவர் தொகுத்தார் - என்பது விளங்கும், கோத்தல்