பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்றால் தொகுப்பது தானே! நல்லந்துவனார் பாடல்கள் அகநானூறு, நற்றிணை, பரிபாடல் ஆகியவற்றிலும் இருப்ப தால், இவர், மற்றத்தொகை நூல்களைப் போலவே கலித் தொகையினையும் சங்க காலத்திலேயே தொகுத்துவிட்டார் என்பது புலனாகலாம். நூல் அமைப்பும் முறைவைப்பும்: நூலின் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடலும், அடுத்து, பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் வரிசை யில் அவ்வத்திணைக்கு உரிய பாடல்களும் அமைக்கப்ப்ட் டுள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், அந்தப் பாடல் எது பற்றியது என்பதை அறிவிக்கும் துறை கூறப்பட்டுள்ளது. உரையாசிரியர் ச்சினார்க்கினியர் கைச்சரக்கு என து, ந கு உணரலாம். நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்னும் மூன்று நூல்களைப்போல் கலித்தொகையும் அகப்பொருள் நூலா யினும், அவற்றிற்கும் இதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. அவை யா!ெ ை: (1) அவை மூன்றும் ஆசிரியப் பாவால் ஆனவை; இது கலிப்பாவால் ஆனது. (2) அவற்றின் பாடல்கள் அடி வரையறை உடையவை; இதற்கு அடிவரையறை யில்லை. (3) அவை நூற்றுவர்க்கு மேற்பட்ட பலரால் இயற்றப் பட்டவை; ஐங்குறுநூறு போல் இது குறிப்பிட்ட ஐவரால் இயற்றப்பட்டது. (4) அவை உதிரிப் பாடல்களின் தொகுப்புக்கள், இது ஐங்குறு நூறுபோல் ஐவரால் ஆக்கப்பட்ட ஐந்து சிறு நூல் களின் திரட்டாகும். எனவே, இதனைப் பன்மாலைத்திரள் எனலாம். *. (5) அவற்றில் ஐந்திணைப் பாடல்களும் மாறி மாறிக் கலந்துள்ள. இது, ஐங்குறு நூறு போல் திணை வாரியாக உள்ளது. (6) மற்ற நூல்களில் ஐந்திணைவரிசை முறைவைப்பு