பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றைம்பது கலித்தொகை 343 வெவ்வேறு விதமாக உள்ளது; இதில் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் முறைவைப்பு உள்ளது. ஐந்தினைகளும் எந்த வரிசையிலும் இருக்கலாம் என்னும் செய்தி முன்பு பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளது. இது பற்றிக் கலித்தொகை உரையின் இறுதியில் நச்சினார்க்கினியரும் கூறியுள்ளார். அப் பகுதி வருமாறு: “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்புழிச் சொல்லாத முறை யாற் சொல்லவும்படும் என்றலின், இத்தொகையைப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என இம் முறையே கோத்தார் நல்லந்துவனார்;. - இதனால், திணைகளின் முறைவைப்பு எப்படியும் இருக்க லாம் என்பது தெளிவு, நல்லந்துவனார் தாம் பாடிய நெய்தல் திணையை இறுதியில் வைத்திருப்பது அவரது அடக்கத்தை அறிவிக்கிறது. திணைப்பெயர் வழக்கு: நெடுந்தொகைப் பாடல்கள் களிற்றியானை நிரை, மணி மிடை பவளம், நித்திலக் கோவை என்னும் மூன்று பிரிவினைப் பெயர்களால் தொல்காப்பிய உரையில் சுட்டப்பட் டிருப்பது போலவே, கலித்தொகைப் பாடல்கள் பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி எனத் திணைப் பிரிவினைப் பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. இதற்குத் தொல்காப்பிய உரைகளிலிருந்து எத்தனையோ எடுத்துக் காட்டுக்கள் தரமுடியும். இதனை விரிப்பிற் பெருகு' மாதலின் இம் மட்டில் விடுப்போம். இந்தத் திணைப்பெயர் வழக்காறு இந்தக் காலத்திலும் உள்ளமை ஈண்டு நினைவு கூரத் தக்கது. - - . . திணைப்பெயர் வழக்கை மிகுதியாகக் கையாண்டிருப்பவர் நச்சினார்க்கினியர் எனலாம். இவர் இன்னொரு புதுமையை யும் கையாண்டுள்ளார். தொல்காப்பியம் செய்யுளியலில் "தரவும் போக்கும் என்னும் (154-ஆம்) நூற்பாவின் உரை யிடையே, 'காராரப் பெய்த என்னும் முல்லைப்பாட்டுள்..."