பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபது பரிபாடல் 345 பரிபாடல்' என்னும் பெயரில் இந்தக் கடைச்சங்கத் தொகை நூல்இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடல் என்னும் பாடல் வகையைப் பற்றிய பொதுச் செய்திகள், தலைச்சங்க நூல்களுள் ஒன்றான எத்துணையோ பரிபாடல்' என்னும் தலைப்பின்ழ்ே முன்பு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு இந்தத் தலைப்புக்கு முன்னே உள்ள 'கலித்தொகையும் பரிபாடலும் என்னும் பொதுத் தலைப்பின் கீழும் உரிய செய்தி கள் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியம்-செய்யுளியவில் பரிபாடலுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ள நாற்பாக்கள் அனைத்தும் முன்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அந் நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைப்பகுதிகளைக் காணின், பரிபாடலுக்கு உரிய இலக்கணங்கள் நன்கு புலனாகம். உரையாசிரியர்கள் கூறியுள்ளபடி, பரிந்துவரும் பாடலாகிய அந்தப் பரிபாடல் என்னும் வகைப் பாடல்களின் தொகுப்பாகிய எழுபது பரிபாடல் என்னும் நூலுக்கு வருவோம். பாடல் பங்கு: எழுபது பரிபாடல்களுள் திருமாலுக்கு எட்டுப்பாடல்களும் முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், காடு கிழாளுக்கு ஒன்றும், வையை யாற்றிற்கு இருபத்தாறும், மதுரைக்கு நான்கும் உரிய் பாங்காகும். இதனை, 'திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று-மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ய செய்யபரி பாடல் திறம்' என்னும் பழைய வெண்பாவால் அறியலாம். இவ்வாறு எழுபது பரிபாடலால் தொகுக்கப்பட்ட இந்நூலில் இப்போது இருபத் திரண்டு பாடல்களே கிடைத்து அச்சிடப்பட்டுள்ளன. இவ் விருபத்திரண்டனுள் திருமாலுக்கு ஆறும், முருகனுக்கு எட்டும் வையைக்கு எட்டும் உரியனவாம். கிடைத்துள்ள ஒலைச் சுவடி களில் மற்றப் பாடல்கள் காணப்படவில்லை. கிடைத்துள்ள பாடல்களுக்குப் பரிமேலமகர் உரையும் கிடைத்துள்ளன. அவர்