பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 தமிழ் நூல் தொகுப்புக் கலை மொழிகளிலும் காலச்சூழ்நிலைகட்கு ஏற்ப, உரிய மாறுதல்ட களுடன், பாடற்கலை படிப்படியாய் வளர்ச்சி பெற்று வந்திருக் கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. - பாடற்கலையின் பயன்கள்: | பொதுவாகக் கலைகளைக் கவின்கலை, பயன்கலை என இரண்டாகப் பிரித்து கூறுவது வழக்கம். ஒவியம், சிற்பம் முதலியன கவின் கலை - அதாவது - அழகுக் கலைகளாம். அவற்றால் வாழ்க்கைக்கு நேரடிப் பயன் பெரும்பாலும் இல்லை; அழகைப் பார்த்துச் சுவைத்து மகிழ்வதோடு சரி. கணிதக்கலை, மருத்துவக்கலை முதலியன வாழ்க்கைக்கு நேரடிப் பயன் அளிக்கும் பயன் கலைகளாகும். அழகைக் கண்டு சுவைக்கும் இன்பக் கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பாடற்கலையோ, கவின் கலையுமாகும் - பயன்கலையுமாகும். பாடற்கலையிலுள்ள கவின் கலைக் கூறுகளை முதலிற் காண்பாம்: பாடலைப் பாடுவதாலும் கேட்பதாலும் ஒருவகைப் பொழுதுபோக்கு இன்பச்சுவை உள்ளது. பாடலின் இசையால் செவிக்கு இன்பம்; பொருள் நயத்தால் கருத்துக்கு இன்பம்; சொல்நயத்தால் செவிக்கும் கருத்துக்கும் ஒருசேர இன்பம். பொதுவாக பாடலின்பம், அலுப்பு-களைப்பைப் போக்கி ஒய்வு நேரப்பொழுது போக்கிற்கு உதவுகிறது. அடுத்துப் பாடற் கலையிலுள்ள பயன்கலைக் கூறுகளைப் பார்ப்போம்: பாடல்களிலுள்ள கருத்துக்கள் அகக்கண்ணைத் திறக்கின்றன: உள்ளுணர்வையும் மனவெழுச்சியையும் தூண்டி நன்முறையில் தொழிற்படுத்துகின்றன; இவ்வாறு ஒழுகவேண் டும், இவ்வாறு ஒழுகலாகாது என்றெல்லாம் அறிவுரை தரு கின்றன. வாழ்க்கைக்கு நல்ல குறிக்கோளை வகுத்துக் கொடுக் கின்றன; உள்ளத்தைப் பண்படுத்தி நல்லொழுக்க வழியில் திருப்பிவிடுகின்றன; கற்பனை நயத்தில் ஆழச்செய்து கவலையை மறக்கச் செய்கின்றன; கடந்தகால நடைமுறை களையும் வரலாறுகளையும் அறிவித்து, இனி எதிர்காலத்தில் திட்டமிட்டு நல்வாழ்வு வாழ வகை செய்கின்றன.