பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபது பரிபாடல்: 347 லின் இசையாசிரியர் பெயரும் தெரியாதபடி ஒலைச்சுவடி சிதைந்துள்ளது. எனவே, பத்தொன்பது பாடல்களுக்கு இசை யமைத்த பதின்மர் பெயர்கள் தெரியவருகின்றன. அவர்கள் கண்ணகனார் (21-ஆம் பாடல்), கண்ணனாகனார் (5), கேசவ னார் (14), நந்நாகனார் (12), நல்லச்சுதனார்(16,17,18,20), நன் னாகனார் (2), பித்தாமத்தர் (7), ப்ெட்டகனார் (3,4), மருத் துவன் நல்லச்சுதனார் (6,8,9,10,15,19) ஆகியவராவர். இவர் களுள் கேசவனார் தம் (14) பாடலுக்குத் தாமே இசைவகுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது. நூல் அமைப்பும் தொகுப்பும்: இருக்கும் இருபத்திரண்டு பாடல்களையும் அடிப்படை யாகக் கொண்டு நூலமைப்பை ஆராயுங்கால், பாடல்கள் ஆசிரியர் வாரியாகவோ அல்லது பொருள் வாரியாகவோ வரிசைப் படுத்தப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆசிரியர் பதின்மூவரின் பாடல்களும் மாறிமாறிக் கலந்து வந்துள்ளன. அவ்வாறே, திருமால், செவ்வேள், வையை ஆகிய முப் பொருள் பற்றிய பாடல்களும் மாறிமாறிக் கலந்தே அமைக்கப் பெற்றுள்ளன. இதைக் காண வியப்பாயிருந்தது. நூலைத் தொகுத்தவர் ஆசிரியர் வாரியாகப் பாடல்களை வரிசைப்படுத் தாவிடினும், பொருள் வாரியாகவாவது வரிசைப் படுத்தி யிருக்கலாமே! அஃதாவது,- முதலில் திருமாலைப் பற்றிய பாடல்களையும், இரண்டாவதாகச் செவ்வேளைப் பற்றிய பாடல்களையும், அடுத்து வையையைப் பற்றிய பாடல்களை யும், அடுத்து மதுரையைப் பற்றியபாட ல்களையுமாக இப்படி யாவது வரிசைப்படுத்தித் தொகுத்திருக்கலாமே! இவ்வாறு பொருள் வாரியாகவாவது தொகுக்காமல், கண்டபடி அமைத்துத் தொகுத்திருப்பதை எண்ணியபோது தொகுப்பாசிரியர்மேல் வருத்தம் ஏற்பட்டது. பின்னர் ஒர் உண்மை புலப்பட்டபோது, தொகுப்பாசிரியர்மேல் ஏற்பட்ட வருத்தம் நீங்கியது. அந்த உண்மையாவது:- பரிபாடல் ஒர் இசைப்பாட்டு என்றோம். எனவே, இந்நூற் பாடல்கள் தேவாரம்போல இசைவாரியாக வரிசைப்படுத்தித் தொகுக்கப் பட்டுள்ளன என்னும் உண்மை கூர்ந்து நோக்கியபின் விளங்