பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 தமிழ்நூல் தொகுப்புக் கலை "வானாரெழிலி' என்று தொடங்கும் நீளமான முழுப்பாடல் ஒன்றினை எடுத்துக்காட்டியுள்ளனர். பரிபாடல் இனப்பாட லுக்கு எடுத்துக் காட்டாக இப்பாட்டுக் காட்டப் பட்டுள்ள மையின், இஃது, எழுபது பரிபாடல் என்னும் நூற்பாடல்களுள் ஒன்றாக இருக்கக்கூடும். இது திருமாலைப் பற்றியது. (2) தொல்காப்பியம்-செய்யுளியலில் பரிபாடலுக்கு இலக் கணங் கூறும் கட்டுரை வகையான் என்னும் (119-ஆம்) நூற் பாவின் உரையிடையே, இளம்பூரணர். மாநிலம் தோன் றாமை' என்று தொடங்கும் நீளமான முழுப்பாடல் ஒன்றினை எடுத்துக் கர்ட்டியுள்ளார். இஃதும் எழுபது பரிபாடலுள் ஒன்றாக இருக்கவேண்டும். இது வையையைப் பற்றியது, - (3) கொச்சகம் அராகம் (செய்யுளியல் - 121) என்னும் நூற்பாவின் உரையிடையே. . 'அறவோர் உள்ளார் அருமறை காப்ப' என்னும் பரிபாடலுள், 'செறுநர் விழையாச் செறிந்தகங் கேண்மை மறுமுறை யானும் இயைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்குஇது வெள்ளைச் சுரிதகத்தான் இற்றது” எனப் பேராசிரியர் வரைந்துள்ளார். இவ்வாறே நச்சினார்க் கினியரும் வரைந்துள்ளார். இதனால், 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடல் ஒன்று இருத்தமை புலனாகும். இப் பாடல் வையையைப் பற்றியது. (4) செய்யுளியலில், பரிபாடல்லே' என்று தொடங்கும் (120 - ஆம்) நூற்பாவின் உரையிடையே, "மண்ணார்ந் திசைத்த முழவொடு கொண்ட தோள் கண்ணோ டெனவிழுஉங் காரிகை கண்டார்க்குத் தம்மோடு கிற்குமோ நெஞ்சு எனப் பரிபாடல் வெண்பா உறுப்பாக வந்தது". எனப் பேராசிரியர் ஒரு பரிபாடலின் பகுதியை எடுத்துக் காட்டியுள்