பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க் கண்க்கு 355 மரபு பெருவாரியாக உள்ளது. பதினெண் கீழ்க் கணக்கு: என்பது, பதினெட்டு நூல்களையும் சேர்த்துத் தொகுத்துக் கூறும் ஒருவகைத் தொகைப் பெயராகும். எனவேதான் இது பற்றி இந்நூலில் ஆராயவேண்டியுள்ளது. இத் தொகைப் பெயரைப் 'பன். மலர் மாலைத் திரள் எனக் கூறலாம். கீழ்க் கணக்கு-இலக்கணம் மேல் கணக்கு, கீழ்க்கணக்கு ஆகியவற்றிற்குப் பன்னிரு பாட்டியலில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அடியளவால் நிமிர்ந்த-நீண்ட-பெரிய பாடல்களாகிய ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியவற்றால் ஆன தொகுப்பு நூல்கள் மேற்கணக் காகும்; அடியளவால் நிமிராத - நீளாத-குறுகிய வெண்பா வகைப் பாடலால் அறம், பொருள், இன்பம் ஆகியவை பற்றித் திறம்படக் கூறும் நூல்கள் கீழ்க்கணக்காகும் - எனப் பன்னிரு பாட்டியல் கூறுகிறது. "அகவலும் கலிப்பா வும்பரி பாடலும் பதிற்றைங் தாதி பதிற்றைம்ப தீறா மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக்கு கெனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே.” (346) "அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்.” (348) என்பன, பன்னிரு பாட்டியல் நூற்பாக்களாம்; இவை இலக்கி யம் கண்டதற்கு இலக்கணம் கூறியுள்ளன. அம்மை தொல்காப்பியர் செய்யுளுக்கு உரியனவாகக் கூறியுள்ள = எட்டு வனப்புக்களுள் அம்மை’ என்பதும் ஒன்று. அந்த 'அம்மை' என்னும் வனப்புக்கு எடுத்துக்காட்டாகப் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிட்டுள்ளனர் உரையாசிரியர்கள். இனி அம்மை பற்றிய தொல்காப்பிய நூற்பாவையும் அதன் உரைப் பகுதிகளையும் காண்போம்: